Friday, October 15, 2010

பணக்கார நாடு இந்தியா!!


அன்று மாலை மணி 6 .30 இருக்கும்.அலுவலகம் முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கிறேன்.போகும் வழியில் இடை வழியில் இருக்கும் ஓர் உணவகத்தில் எப்போதும் இரவு உணவு வாங்கிச்செல்வது வழக்கம்.அன்றும் அப்படித்தான்..ஐந்து ,ஐந்து இட்லி..ரெண்டு பார்சல்.. என ஆர்டரை கொடுத்துவிட்டு அமர்ந்திருக்கிறேன்.
ஒட்டியக் கன்னமும்,கிழிந்த சட்டையும்,இல்லாத வயிறும்,அழுக்கேறிய உடலுமாய் அவன் வருகிறான்.யூ நோ ஹிந்தி ஆர் இங்கிலீஷ் என தன் சம்பாஷனையை ஹோட்டல் ஊழியரிடம் ஆரம்பிக்கிறான்.
ம்ஹூம்..எனக்கு தெரியாது..தமிழு பேசுவியா நீயி ?என ஹோட்டல் ஊழியர் அவனிடம் வினவுகிறார்.
தெரியாது என மண்டையாட்டுபவனிடம் தன் உணவகத்தில் வேலை செய்யும் இன்னொரு ஊழியனை அறிமுகம் செய்கிறார் அவர்.
அவன் ஹிந்தியில் அவனிடம் வினவ, இருவர் முகத்திலும்  உற்சாகம்.எல்லாம் மொழிப்பாசம் தான்..வேலை கிடைக்குமா எனக்கு இங்கே? என பேசிக்கொண்டிருக்கிறான் வந்தவன்.பார்சல் வரும்வரை சில நிமிடங்கள் அவர்களை எம் கண்கள் நோக்கின.
அதற்கிடையில் உணவக ஊழியர்களின் உற்சாகமிக்கப்  பேச்சு என் செவிப்பறை தொடுகிறது...

ஓனருக்கு போனப் போடு.இந்த மாதிரி ஆளுங்க கிடைக்கிறது கஷ்டம். .ஆளப் பாத்தாலே தெரியுது.. போடுறதத் தின்னுட்டு,கொடுக்கிற சம்பளத்த வாங்கி கிட்டு கொத்தடிமையா கெடப்பான்னு.

அதற்கிடையில் எனக்கானப் பார்சல் கட்டப்பட்டிருக்கிறது..சார் பார்சல் என ஹோட்டல் ஊழியர் அழைக்கிறார்..பார்சலை வாங்கிக்கொண்டு,அவர்களின் பேச்சினையும்  உள்வாங்கிக்கொண்டு ரணமான இதயத்தோடு...பாவம் இவர்கள் வேலையாவது அவனுக்கு கொடுக்கட்டும்,சம்பளம் குறைவாயினும் வேலையும்,சாப்பாடுமாவது அவனுக்கு கிடைக்கட்டும், என வேண்டிக்கொண்டு வெளியேறுகிறேன் ஹோட்டலை விட்டு..

நூறடிக் கடந்திருப்பேன்..அவனும் வெளிவருகிறான்..ஹோட்டல் ஓனர் வேண்டாமென சொல்லிவிட்டார்ப் போலும்..

பக்கத்துக் கடையை நோக்கி பயணிக்கின்றன அவன் வறுமை தோய்ந்த கால்கள்..அங்காவது வேலைக் கிடைக்குமா.எத்தனை கடைகளை அவன் கால்கள் ஏறி மிதித்தனவோ தெரியவில்லை.அன்றாடம் இந்த அல்லல் மிகுந்த வாழ்க்கையில் எத்தனையோப் பேர் அல்லாடிக் கொண்டுதானிருக்கிறார்கள்..உலக தரவரிசைப் பட்டியலில் மட்டும் இந்தியாவின் பணக்காரர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது..

பாரமில்லாத அவனது நடை என் மனதை பாரமாக்கியது..

Widget byLabStrike


15 comments:

 1. really nice. visit my site www.anbutamilnet.blogspot.com

  ReplyDelete
 2. இதுபோல் வேற்று மாநிலத்தவர்/மொழி தெரிந்தவரை ஏய்க்கும் நிலை எல்லா இடத்திலும் காணப்படுகிறது. இந்தியா ஏழைகள் அதிகமாக இருக்கும் பணக்கார நாடுதான்.

  ReplyDelete
 3. இந்தியா ஏழைகள் அதிகமாக இருக்கும் பணக்கார நாடுதான்.////

  ஆமாம் நண்பரே...அருமையான வார்த்தை

  ReplyDelete
 4. this writing is well known persons writing.
  well to do.
  But all Black money is very power to indian economic based on working peoples money.

  ReplyDelete
 5. ஒரு கோடி பணக்காரர்களினாலும் அவர்களுக்காக ஆளும் அரசினாலும் பொதுவான பார்வை எனும் சன்னல் மூடப்பட்டிருப்பதால் அதற்க்கு வெளியே நிற்கும் மீதி 99 கோடி வறிய மட்டும் நடுத்தர கூட்டம் தெரியவில்லை..!!

  உங்கள் உண்மையின் எழுத்துக்கள் வலி மை

  ReplyDelete
 6. //அவன் வறுமை தோய்ந்த கால்கள்..அங்காவது வேலைக் கிடைக்குமா.எத்தனை கடைகளை அவன் கால்கள் ஏறி மிதித்தனவோ தெரியவில்லை.அன்றாடம் இந்த அல்லல் மிகுந்த வாழ்க்கையில் எத்தனையோப் பேர் அல்லாடிக் கொண்டுதானிருக்கிறார்கள்..உலக தரவரிசைப் பட்டியலில் மட்டும் ....?!

  sorry ....its our india.

  ReplyDelete
 7. பாரமில்லாத அவனது நடை என் மனதை பாரமாக்கியது..

  --------

  எம்மையும்..:(

  ReplyDelete
 8. ஆமாம் நண்பரே.. பார்ப்பவரை கனக்க வைக்கும் நிகழ்வு அது..

  ReplyDelete
 9. வறுமையும் பசியும் மிகவும் கொடிது. என் கண்கள் முன் அவர் அப்படியே நிற்கின்றார். அவருடன் சேர்ந்து அவர் பசியும் நிற்கிறது.

  ReplyDelete
 10. இதயம் கனக்கும் பதிவு@

  ReplyDelete
 11. ஆமாம்..நெஞ்சம் கனத்தது நண்பா..

  ReplyDelete