Friday, October 8, 2010

அடடே..நம்ம குவார்டர் கோவிந்தனக் கேக்குறீங்களா??மஞ்சள் பையை சுமந்தபடி வந்த அந்தப் பெரியவர் ராமுவைக் குறுக்கிட்டார்.
சார் நீங்க இந்தக் கம்பெனில தான் வொர்க் பண்றீங்களா?

ஆமாம் சார் என்று  ராமுவும் ஆமோதித்தான்.

உங்களுக்கு கோவிந்தனை தெரியுமா??பெரியவர் தொடர்ந்தார்.

கோவிந்தன்களைத் தெரியும்..இங்க நிறைய கோவிந்தன்கள் வொர்க் பண்றாங்க.நீங்க எந்த கோவிந்தனக் கேக்குறீங்கன்னு தெரியலையே..என்ன ஊரு..ஆள் எப்படி இருப்பார்னு சொல்ல முடியுமா?பெரியவரை நோக்கிய ராமுவின் கேள்வி இது.

திருச்சிக்கார கோவிந்தன் -பெரியவரின் பதில்.

திருச்சி கோவிந்தன் மூணுப் பேரு இருக்காங்க..ஆள் எப்படி இருப்பார் சொல்லுங்க சார் என்றான் ராமு..

ஒல்லியா..ஹைட்டா..கலரா இருப்பார்..என்று பெரியவர் இழுக்க..

அடடே..நம்ம குவார்டர் கோவிந்தனக் கேக்குறீங்களா??முன்னாடியே சொல்லிருக்கக் கூடாதா நீங்க.இந்த ஏரியால சின்னப் புள்ளையக்  கேட்டாக் கூட சொல்லும் ,குவார்டர் கோவிந்தன் யார்னு.வாங்க காட்டுறேன்.. என்று ராமு சொல்லி முடிக்கவும், பெரியவரின் முகத்தில் ஏதோ இனம்புரியாத வருத்தம்.அவரின் முகம் விருட்டென்று மாறியது.கோபத்தின் உச்சத்தில் முகம் சிவந்தார்.

ராமுவுக்கு ஒன்றும் புரியவில்லை..பெரியவர் ஒருவேளை கோவிந்தனின்  அப்பாவோ..அது அறியாமல் உளறி விட்டோமோ என்று தம் மனதிற்குள் எண்ணி கொண்டான்,இருந்தும் அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் நகர்ந்தான்.

நகர்ந்தவனை எதிர்பாரமல்....தம்பி...பெரியவரின் கைகள் பற்றின..

நல்லகாரியம் பண்னீங்க தம்பி..என் பொண்ண கோவிந்தனுக்கு கட்டிக் கொடுக்கலாம்னு இருந்தேன்.அவங்க ஊருல விசாரிச்சப்ப கோவிந்தன் மாதிரி ஒரு நல்லப் பையன பாக்க முடியாதுன்னு சொன்னாங்க..எதுக்கும் ஆபீஸ்ல ஒரு வார்த்தை விசாரிக்கலாம்னு இங்க வந்தேன்.நீங்க உண்மைய சொல்லீட்டீங்க.நல்லவேளை உங்க புண்ணியத்துல என் பொண்ணு வாழ்க்கை தப்பிச்சது.நன்றி யறிவித்தலை அறிவித்து விட்டு பெரியவர் நகர்ந்தார்.

ராமுக்கு தலை சுற்றியது.இரண்டு நாட்களுக்கு முன்பு  ராமுவும்,கோவிந்தனும் குடித்துக் கொண்டிருந்த போது கோவிந்தன் சொன்னது ராமுக்கு ஞாபகத்துக்கு வந்தது.

மச்சான் எங்க வீட்ல எனக்கு அன்ஜாரு வருசமா  பொண்ணு தேடி தேடி ஓஞ்சி போய்ட்டாங்கடா.கிட்டத்தட்ட எத்தனையோ பொண்ண  பார்த்துட்டேன் ஒன்னும் செட் ஆகல.வயசும் ஆகிடுச்சி.அந்தக் கவலைல தான் மச்சான் குடிக்க ஆரம்பிச்சேன்.அதனாலதான் இந்த குவார்டர் கோவிந்தன்கிற பேரெல்லாம்.இப்போ ஒரு பொண்ணு செட் ஆகுற மாதிரி இருக்கு மச்சி.அனேகமா செட் ஆகிடும்.இன்னைக்கி சந்தோசத்துக்காக அடிக்கிறேன்..இதுதான் நான் கடைசியா குடிக்கிற சரக்கா இருக்கும் டா....சியேர்ஸ்...

அவன் சொல்லியது திரும்ப திரும்ப ராமுவின் நினைவுகளில் நிழலாடிக் கொண்டிருக்கிறது..

அது நடந்து ஆறு மாதங்கள் கடந்திருக்கும்.. குவார்டர் கோவிந்தனின் பெயர் ஆப் கோவிந்தன் ஆகி இருந்தது...ராமுவின் புண்ணியத்தில்...

Widget byLabStrike


19 comments:

 1. குமுதத்தில் வரும் ஒரு பக்க சிறுகதை போல இருந்தது... ஆனாலும் நம்ம ஆளுங்களுக்கு குடும்பத்துல குழப்பத்த உண்டாக்குறதுல ஒரு தனி கிக்கு தான்...

  ReplyDelete
 2. ஆமாம் நண்பரே..நன்றி..

  ReplyDelete
 3. //குவார்டர் கோவிந்தனின் பெயர் ஆப் கோவிந்தன் ஆகி இருந்தது…ராமுவின் புண்ணியத்தில்…//
  Totally OFF now.

  ReplyDelete
 4. நல்ல ஒரு கதை உருவாக்கம். குரும்படத்திக்கான தகுதியான கதைக் களம்.
  தொடரட்டும் உன் உருவாக்கம்

  ReplyDelete
 5. மிக்க நன்றி நண்பரே..

  ReplyDelete
 6. இந்தக்கதையை தினமலர் வாரமலர் இதழுக்கு அனுப்பவும்.அருமை

  ReplyDelete
 7. மிக்க நன்றி நண்பரே..முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
 8. NANBEN DA...............................

  ReplyDelete
 9. கதை அருமையாக இருந்தது

  ReplyDelete
 10. நன்றி நண்பரே...மீண்டும் வருக..

  ReplyDelete
 11. பாவம் அன்றோ கோவிந்தன் ! ! !

  தோழா வேறு என்ன கதை இங்கே இருக்கு,

  லிங்கை அனுப்பிவிடு எனக்கு :-)

  ReplyDelete
 12. ஹா.ஹா..நன்றி..நன்றி..பின்னூட்டம் கூட ரைமிங்கா இருக்கு தோழி!

  ReplyDelete
 13. அன்பின் படைப்பாளி

  குறுங்கதை அருமை - ஒரு செய்தி ஒரு மனிதனை எவ்வாறு புரட்டிப் போடுகிறது. குவார்ட்டர் ஆஃப் ஆகிறது. ம்ம்ம்ம் - நல்ல கருத்து. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 14. மிக்க நன்றி நண்பரே தங்கள் வருகைக்கும்..வாழ்த்திற்கும்..மீண்டும் வருக.

  ReplyDelete
 15. [...] www.padaipali.wordpress.com By: admin Date: June 16, 2011 10:14 pm Categories: படைப்புகள்Post tags: ஊடகப் படைப்பாளிகள் சங்கம், ஊடங்கங்கள், எழுத்தாளர்கள், ஓவியம், கதை, கவிதை, காவியம், சங்கம், தொலைக்காட்சி, படைப்பாளி, படைப்பாளிகள், மீடியா Feedback [...]

  ReplyDelete