Thursday, October 7, 2010

நல்ல சகுனமும்..கெட்ட நேரங்களும்..



பேச்சினூடே

கத்திவைக்கும் பல்லி.

ஈரம் தோய்ந்த தலையை

ஆட்டும் ஆடு.

கறுப்புப் பூனையின்

குறுக்கிடைப் பயணம்.

இருட்டைக் கிழிக்கும்

ஆந்தையின் அலறல்.

எருமை மாடுகளின்

எதிர்ப்புற வருகை.

தலை மீதில் விழுந்த

காக்கையின் எச்சம்.

சாமத்து சேவலின்

மூளைக்குழம்பிய கூவல்.

இப்படியே நீள்கிறது

நல்ல சகுனமும்

கெட்ட நேரங்களும்..

ஆறறிவில் வாழுகிறானாம்

மனிதன்.

ஐந்தறிவியின் செயல்களில்

அடிமைப்பட்டு..


Widget byLabStrike


No comments:

Post a Comment