Sunday, October 3, 2010

எந்திர மனித உலகில்...

robot-rajini-robot

  • செருப்பு போடாதக் கால்களில்


முள் சிநேகமானதன்று.

வெயிலின் சீற்றம் கண்டும் தேகம்

வியர்க்கவில்லை யன்று.

குரங்கு இனந்தான் மனிதன்-என

மரமேறி குறிப்பால் சொன்னோம் அன்று.

விழுந்து எழுந்த அணிலாய்

உடல் வீரியம் கொண்டதன்று.

எந்திரம் குறைந்த உலகில்

உடல் எந்திரமாய் இயங்கியதன்று.

  • ஹை ஹீல்ஸ் போட்டக் காலில்


ஆணி வந்தது இன்று.

வியர்க்கவேண்டி ஏசி அறையில்

வாக்கிங் போகிறோமின்று.

கூட்டுக்கிளி இனமோ மனிதன்

நமை பூட்டிக் கொள்கிறோமே இன்று.

அமர்ந்து எழும் போதே

அடுத்தவன் கையை எதிர்ப் பார்க்கிறதின்று.

எந்திர மனித உலகில்

மனம் இறுகிப்போனது இன்று!

Widget byLabStrike


10 comments:

  1. //எந்திர மனித உலகில்

    மனம் இறுகிப்போனது இன்று! //

    நிதர்சனம்

    ReplyDelete
  2. இயந்திரத்தனமான உலகில் எதையோ தேடி எப்படியோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மனிதம் கொஞ்சம் கொஞ்மாக அழிந்து கொண்டிருக்கிறது.

    சிறப்பான கவிதை நண்பரே!

    ReplyDelete
  3. சிறப்பான நன்றி நண்பரே!

    ReplyDelete
  4. இடது ,வலது
    இரு மூளைக்கும்
    வேலை வைத்து ,
    ஓவியத்தில் ,
    காவியத்தை
    படைக்கிறீர்.
    வாழ்க ! வளர்க !

    ReplyDelete
  5. நன்றி..நன்றி..உங்கள் வாழ்த்துக்கும்,பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே...மீண்டும் வருக.

    ReplyDelete
  6. உலக சினிமாவைப் பற்றியா. எனக்கு சினிமா ரொம்ப பிடிக்கும். இணையத்தில் படத்துக்கான இணைப்பினையும் தர வேண்டும் நண்பரே!.

    தொடரை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  7. இணைப்பையும் நிச்சயம் தருகிறேன் நண்பரே..

    ReplyDelete