Friday, October 1, 2010

எந்திரனும்..அந்நியனும்..அலுவலகம்,பேருந்து,உணவகம்,இணையம்,சமூக வலைப் பின்னல்கள்,நடைபாதை,தெரு,நண்பர்கள்,கழிப்பிடம் என கிட்டத்தட்ட இந்த ஓரிரு வாரங்களாகவே ஒரே டாக்தான். ஏதோ திருவிழாவை எதிர்நோக்குவது போன்று மக்களின் எதிர்ப்பார்ப்பு.பத்துப்பேரில் ஒருவர்,இருவராவது தவறாமல் அதனைப் பற்றி பேசியும்,சிலாகித்தும்,பெருமைப்பட்டும் கொண்டிருக்கிறார்கள்.

ஒருபக்கம் டிக்கெட் வாங்கும் சாதனைக்காக தங்களை தயார்ப் படுத்திக் கொண்டிருந்தார்கள்,கொண்டிருக்கிறார்கள்.இன்னொருப்பக்கம் டிக்கெட் வாங்கிய சாதனையை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.100 ரூபாய் டிக்கெட் 500 ரூபாய் 1000 என்றெல்லாம் ஆங்காங்கே கொக்கரிக்கிறார்கள்..எவ்வளவு ஆனாலும் பரவால.. தலைவர் படத்தை முதல் நாள் பாக்கணும் எடு.என ஒருக்கூட்டம் கூக்குரலிடுகிறார்கள்.ரஜினி நடித்த ரோபோ என்கிற எந்திரனுக்கு டிக்கெட் வாங்குவதற்கும்,படம் பார்ப்பதற்கும் தான் இந்த அலப்பறை.. புளித்துப்போன இந்த செய்தியை திரும்பத் திரும்ப,திரும்புமிடங்களில் எல்லாம் கேட்டு வெறுத்துப்போயிருந்தேன்.

அவர்கள் படம் பார்க்கும் ஆர்வத்தில் பேசுவதாலோ,ரஜினி மீதுள்ள அபிமானத்தில் டிக்கெட் வாங்க முயச்சிப்பதாலோ அல்ல அந்த வெறுப்பு.இந்த வெறியோ,வேகமோ,உணர்வோ ஈழத்தில் உக்கிரமானப் போரில் நம் இனத்தான் செத்தானே அன்று இருந்திருக்கலாமே.அதற்காகப் போராட பயன்பட்டிருக்கலாமே.(யாருமே போராடவில்லை என்றுக் கூற நான் முன்வரவில்லை)இப்படி டிக்கெட் வாங்க அலைமோதுகிற இனமே,இளைய சமுதாயம் ஒன்று கூடியிருந்தால் வரலாற்றை திருப்பி போட்டிருக்கலாமே!குறைந்தபட்சம் இறந்தவனின் எண்ணிக்கையையாவது குறைத்திருக்கலாம்.நாமும் இனமானம் உள்ளவர்கள் தான் என்று இந்த உலகத்துக்கு உணர்த்தி இருக்கலாம்!

ஆனால் நமக்குதான் உடுத்த உடையும்,வாழ இடமும்,உண்ண உணவிருக்கோ இல்லையோ குடிக்க சரக்கு மன்னிக்க தலைவர் கட் அவுட்டுக்கு ஊத்த சரக்கும் கவலையின்றி கிடைக்கிறதே..நாம் ஏன் கவலைப் பட வேண்டும்.(இது கனடாவிலும்,லண்டனிலும்,சுவிச்சர்லாந்திலும்,அமெரிக்காவிலும் இன்னும்பிற நாடுகளிலும் சுகவாசிகளாய் இருந்து கொண்டு எந்திரனுக்காய் போராடும் போராளிகள் அனைவர்க்கும் தான்)ஈழத்தில் போராடும் தமிழனுக்கு தலைவன் என்ற அங்கீகாரத்தில் போராளி இருக்கிறான்.இங்கே சினிமா கதாநாயகன் தானே எல்லோருக்கும் தலைவன்.எவன் செத்தாலும் கவலைக் கொள்ளாது சினிமாவில் கோடிகளில் கொடி கட்டி பறக்கும் கண்ணியவான்கள் தான் தமிழ் நாட்டு சிம்ம சொப்பனங்கள்.ஹீரோவுக்கு சூட்டிங்கில் சின்ன காயம் பட்டால் கூட நம் உள்ளம் வலிக்கும்,நெஞ்சம் துடிக்கும்.நாம் இளகிய மனது உள்ளவர்கள்.தமிழனாய்,நம் இனத்தானாய்  இருந்தாலும் ஈழத்தவன் நமக்கு அந்நியன் என்று தானே இருக்கிறோம்..நமக்கேன் வலிக்கிறது.

இவன்களுக்கு வேற வேலையே இல்ல..இப்படித்தான் ஈழம்,தமிழ்ன்னு அது இதுன்னு வெட்டியா பேசுவான்க..வாங்க நாம எந்திரன் பாக்கப் போலாம் ...


Widget byLabStrike


No comments:

Post a Comment