Thursday, September 30, 2010

மதமும்,மயிரும் ஒன்னு..



மதமும்,மயிரும்

ஒன்னு..

வளரும் போதே வெட்டிட

வேணும்.

ஆசப்பட்டு வளத்தா

ஆப்பு நமக்குதான்.

மயிர் வளந்தா மண்டை

அரிக்கும்.

மதம் வளந்தா குண்டு

வெடிக்கும்.

மொட்ட அடிச்சா

மண்டைல கனமில்ல.

மதம் அழிஞ்சா

மானுடத்துக்கு பயமில்ல.

Widget byLabStrike


23 comments:

  1. அருமை நண்பரே! பெரியார் எப்படி எளிமையான உவமைகளுடன் மதத்தை மக்கள் மனதில் பட்டுப்போக செய்வாரோ, அதைப்போல் உள்ளது உங்களது எழுத்து.

    ReplyDelete
  2. நீங்கள் கொடுத்துள்ள ஒப்புமை நன்றாக பொருந்துகிறது. மதம் மனித வாழ்வில் சிறு வயதிலிருந்து இணைந்து வாழ்நாள் முழுதும் உடன் வருகிறது. அதன் மீதான பற்று பட்டும்படாமல் இருக்கும்வரை பிரச்சினையில்லை.

    ReplyDelete
  3. நன்றி நண்பரே..ஏதோ எனக்கு தோன்றியதை எழுதினேன் அவ்வளவுதான்..
    பெரியார் மாதிரி ..அவர் எவ்ளோ பெரிய ஆள்..இருந்தாலும் கேக்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு..

    ReplyDelete
  4. ஆமாம்... நன்றி நண்பரே...... மதம் பிடிக்கிற அளவுக்கு மதத்தைப் பார்க்காமல் இருந்தால், பிரச்சினை இல்லை..

    ReplyDelete
  5. கிண்டலும், நையாண்டியும் கலந்து கட்டி ஒரு அழகான ஆனால் ஆழமான உண்மையை சொன்னீர்கள்.
    இதை உணர்ந்தவர்கள் கூட இன்னமும் அதைத்தான் கட்டிக்கொண்டு கிடக்கின்றனர்.
    இப்படி நினைப்பதே தங்கள் மத நம்பிக்கைக்கு எதிரானது என்பவர்களை என்ன செய்வது?

    ReplyDelete
  6. நன்றி நண்பரே...ஆமாம்..மதத்தால் சமுதாயத்தில் ஓர் தெளிவின்மை நிலவுகிறது..

    ReplyDelete
  7. I would like to connect ./ give a link of your site with in my blog.
    I like the reality / simplicity of your posting.

    Thanks
    Kakkoo.Manickam.

    ReplyDelete
  8. நன்றி..லிங்க் எடுத்து போட்டுக்கொள்ளுங்கள் நண்பரே...தாங்கள் பயன்படுத்தினால் எனக்கும் மகிழ்ச்சிதான்.

    ReplyDelete
  9. மிக்க நன்றி நண்பரே..தங்கள் வருகைக்கும்,பாராட்டுதலுக்கும்.

    ReplyDelete
  10. //மயிர் வளந்தா மண்டை

    அரிக்கும்.

    மதம் வளந்தா குண்டு

    வெடிக்கும்.//

    கல்வெட்டில் பதிக்கலாம்@!...

    ReplyDelete
  11. புல்லரிக்க வைக்கறீங்க நண்பா..நன்றி

    ReplyDelete
  12. அற்புதம்... வார்த்தையே இல்லை பாராட்ட... கலக்கிட்ட நண்பா...

    ReplyDelete
  13. நன்றி..மிக்க நன்றி நண்பரே..

    ReplyDelete
  14. மதம் யானைக்குப் பிடித்தால் , கொண்றுவிடுவார்கள் மனிதர்களுக்குப் பிடித்தால் ஆட்டிவிடுவார்கள் .

    என்ன சொல்லியும் திருந்தாத மக்களும் , அரசும் நாசமாக போகட்டும் .

    கவிதை சிறப்பு ...

    ReplyDelete
  15. நன்றி நண்பரே..உங்கள் வருகைக்கும்..பாராட்டுக்கும்.

    ReplyDelete