
அவள் அழைப்பில் இரண்டு,மூன்று நாட்களுக்கு முன்பே அந்த செய்தியை என்னிடம் அறிவித்திருந்தாள்..நேற்றும் அறிவித்தாள்..இரவு 12 மணியளவில் இன்னும் ஒருமுறை அவளால் அறிவிக்கப்பட்டது.
அப்படியா? என்றேன் நான்.
நீ மறந்துடுவன்னு தெரியும்டா..நாந்தான் உன்ன நெனச்சிக்கிட்டே இருக்கேன்..
நீ எவள நெனச்சிகிடிருக்கியோ..
சரி நல்லா இரு..என்று டயலாக்கோடு உரையாடலை முடிக்கிறாள்.
(என்னப் பன்றது நாந்தான் மறந்துட்டேனே.. இப்போ அவ டேர்ன்... என்ன திட்டினாலும் வாங்கிக்க வேண்டியது தான்..)
உண்மைய சொல்லனும்னா..பொண்ணுங்க அளவுக்கு பசங்களுக்கு ஞாபகம் இருப்பதில்லைன்னு தான் சொல்லணும்..
என் தோழிகளிடத்திலேயே இதை நான் உணர்ந்திருக்கிறேன்..தோழிகள் சரியாக என் பிறந்த தினத்தை ஞாபகம் வைத்திருந்து வாழ்த்து தெரிவிப்பார்கள்..
அவர்களின் பிறந்த நாளை பலமுறைக் கேட்டும் நான் மறந்திருப்பேன்..(பெண்கள் எக்சாம்ல அதிகமா பாஸ் பண்றாங்களே அதான் மேட்டரா!!..) என் வாழ்த்தை எதிர்ப்பார்த்து ஏமாந்த சில ஜீவராசிகள் என்றேனும் ஒரு நாள் எனை அழைத்து திட்டும்..இது எப்போதும் நடக்கின்ற கதை தான்.. அநேகமான ஆண்களுக்கு நடக்கும் கதை தான்.
ஆனால் அவள் அழைப்பு அப்படிப்பட்டதல்ல..முக்கியத்துவம் வாய்ந்தது..முதல் காதலாய் வந்து எனை மூர்ச்சையடைய வைத்தது..ஆணாதிக்கம் பிடித்த எனை தன் அன்பிலே அடக்கி வைத்தது..
பொன்னேட்டில் பொறிக்கப் படவேண்டியது..கல்வெட்டில் செதுக்கப்பட வேண்டியது..நான் மறந்திருக்க கூடாதது..
ஆமாம்..அப்படி என்ன சொன்னாள் அவள்..?
இதே நாளில்தான் முதன் முதலாய் உம்மோடு பேச ஆரம்பித்திருந்தேன்.
நட்பாய் ஆரம்பித்த நம் உறவு காதலாக மூலமானது இந்நாள்தான்.
நம் காதலுக்கு இன்று பிறந்தநாள் தெரியுமா?
வாழ்த்து சொல்லவே உமை அழைத்தேன்..
நமக்கு காதல் வந்து சில ஆண்டுகளும் கடந்து விட்டது..
நம் வாழ்விலே பல மாற்றங்களும் நிகழ்ந்துவிட்டது..
எனக்கு கல்யாணமும் நடந்து விட்டது..
இன்னொருவன் மனைவியாய் இன்றிருந்தும் உன்னையும்,உன் நினைவுகளையும் மறவாமலிருக்கிறேன்.நான் இருக்கின்ற வரை நம் காதல் என்னிடத்தில் இறவாமல் இருக்கும்.எஞ்சிய நினைவுகளாவது உன்னிடம் உள்ளதா ?
-என்கிறாள் அவள்..
உண்மைதான் அவளிருக்கும் வரை என் காதல் அவளிடத்தில் இறவாமல் இருக்கும்..
காலப்போக்கில் நான்தான் மறந்திருக்கிறேன்..
இந்த மறதி எனக்கு மட்டும்னு தான் நினச்சேன்...ஆண் வர்க்கத்துக்கே இது பொதுனு இப்போ தான் தெரிஞ்சுகிட்டேன்.
ReplyDeleteஆமாம் நண்பரே..
ReplyDeleteகதையின் கடைசியில் எதிர்பாராத டிவிஸ்ட். நன்றாக இருக்கிறது நண்பா!
ReplyDeleteநன்றி நண்பரே..
ReplyDeleteநண்பா! நீ மறப்பதற்கு வாய்ப்பே இல்லை. நீ தோழி என்று சிலரை நினைத்திருப்பாய்.
ReplyDeleteவாழ்த்து சொன்ன இந்த பெண்ணை மட்டுந்தான் காதலி என சொல்ல முன்வத்திருக்கிறாய்!
உன் கட்டுரையில் தெளிவாக தெரிகிறது உன் புன்சிரிப்பில் மறைத்துள்ள உன் மனது
அவள் இருக்கும்வரை காதல் வாழும் என்றால் உன் மனது அவளிடதில்தான் உள்ளது
உங்களின் இந்த நிலைமைக்கு என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் உன் மனதை
அமைதிபடுத்திக்கோள் நண்பா!
முதல் காதலை யாராலையும் மாறாக முடியாது உனக்கு அது
ReplyDeleteமரத்து போன விஷயமாக ஆகிவிட்டுது என்று நினைக்கிறேன்
மறத்துப் போகவில்லை..இன்னும் காதல் ஈரம் இருப்பதனால் தான் எழுதியிருக்கிறேன் நண்பரே..
ReplyDeleteஅவளிடத்தில் நானும்,காதலும் இறவாமல் உள்ளோம்..என்னிடத்தில் அவள் மறவாமல் இருப்பாள்...
ReplyDelete//உண்மைதான் அவளிருக்கும் வரை என் காதல் அவளிடத்தில் இறவாமல் இருக்கும்..
ReplyDeleteகாலப்போக்கில் நான்தான் மறந்திருக்கிறேன்.. //
எவ்வாறு மறக்க இயலும் நண்பரே..
அந்த குறிப்பிட்ட நாளை மட்டுமே மறந்திருக்கிறேன்..அவளை மறக்க இயலாது நண்பரே..
ReplyDeleteunmai, angalai vida pengal kadhalil aluthamana vargal.....
ReplyDeletekalangal kadandalum......
aamaam thozhi..nichaiyamaaga!!
ReplyDelete