Wednesday, September 8, 2010

வாடா..போடா..நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்



ஓர் நல்ல குழு..

நல்ல நண்பர்கள்..

சீனியர் ஜூனியர் பாராபட்சமற்ற வேலை..

பாலிடிக்ஸ் இல்லாத டெக்னிசியன்கள்..

இன்முக தயாரிப்பாளர்..இன்சொல் இயக்குனர்..

நட்பு பாராட்டி..இப்படித்தான் இருந்திருக்கிறார்கள்..

வாடா...போடா..நண்பர்கள்..


என் நண்பன் ராகுல் கலை இயக்குனனாய் அறிமுகமாகும் முதல் படம்..காலம் சொல்லும் கலை இயக்குனனாய்,கலைத்துறையில் ஓர் ஜாம்பவானாய் வளரவும்,சிறக்கவும் எனது வாழ்த்துக்கள்....

என் தமையன் உதவி இயக்குனனாய்,முதன் முதலாய் கனவுப் பட்டறையில்..தன் காலடியை பதித்திருக்கும் படமும் கூட..

இனி வரும் காலங்களில்..இறவாத புகழ் பெற்ற இயக்குனர் வரிசையில் இவனுக்குமோர் இடம் கிடைக்க வாழ்த்துக்கள்.

இன்று மாலை இசை வெளியீடு..ஆந்திரா கிளப்பில்..

பாடல்கள் சிறக்கவும்,படம் வெற்றியடையவும்...

மொத்தக் குழுவும் முன்னேற்றப் பாதையில் செல்லவும்...ஏனைய அறிமுகங்கள் ..ஏனைய வெற்றிகளைக் குவிக்கவும்..

என் மனமார்ந்த வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

Widget byLabStrike


5 comments:

  1. படம் வெற்றியடைய என் வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்..... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அனைத்து நண்பர்களின் வாழ்த்துகளுக்கும் என் மனங்கனிந்த நன்றிகள்..

    ReplyDelete