Tuesday, September 7, 2010

தாயின் ஸ்தானத்தில் நண்பன்..

இன்றைய குறிப்பு,என் நண்பனின் சிறப்பு:


நண்பன் பெயர் வேல்முருகன்..கூப்பிடுவது வேலு..என் அலுவலக நண்பர்களுக்கு கூட நன்கு பரிச்சயமான பெயர் அது...அடிக்கடி என் நண்பர்கள் வட்டத்தில் நான் உச்சரிக்கும் பெயராதலால்..

எனக்கும்,அவனுக்கும் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாய் இணைபிரியா நட்பு...எங்கள் வீட்டிலும் அவர்களின் வீட்டிலும் சொந்த பிள்ளைகளாகவே பாசம் பரிமாறிய உறவு.

கல்லூரி நுழைவுத்தேர்வில் நன்றாக வரைந்தும்(எழுதுறக் காலேஜி இல்ல..படம் வரையுற காலேஜி..)அட்மிசன் கிடைக்காத என்னைப் போன்ற waiting list அப்பாவி ...waiting list ல முதல் இரண்டு இடங்களில் எங்கள் இருவரின் பெயர்கள்...எப்படியாவது சீட் வாங்கிவிட முடியுமா என்ற தேடலில் இருவரும் நண்பர்களானோம்..எவன் நேரங்காலமோ தெரியல...காலேஜி சேர்ந்த ரெண்டு பேரு discontinue பண்ணிட்டாங்க...கிடைச்சது ரெண்டு பேருக்கும் சீட்..சேர்ந்தோம் ஓவியக்கல்லூரி..இப்படித்தான் அவனுக்கும் எனக்குமான நட்பு அறிமுகமாகிறது....

அப்புறம் விடுதி வாழ்க்கை,பசி,பட்டினி,அடிதடி,ராகிங்,ரகளை,ரவுடியிசம்,கல்சுரல்,கலாட்டா,டூர் என அனைத்திலும் கூட்டுக் களவானிகள் நாங்கள்..இல்லீகல் ஆனாலும்,லீகல் மேட்டர் ஆனாலும் இருவரும் இணைந்திருப்போம்..

உயிர் கொடுப்பான் நண்பன் என்பார்கள்...உயிரினும் மேலான உதவியை செய்தவன்..

நான் விபத்தில் அடிப்பட்டு கிடந்த நாட்கள்..படுக்கையை விட்டு எழக்கூட முடியாத சூழ்நிலை..படுக்கையில்தான் அனைத்தும் என்கிற நிலை.அப்பா,அம்மா பதட்டப்பட்டு விடுவார்களோ என்கிற பயத்தில் நான் என் வீட்டிற்கு கூட செய்தியை அறிவிக்கவில்லை...எனக்காக தன் அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டு மருத்துவமனையில் ஒரு தாயின் ஸ்தானத்தில் இருந்து..ஒரு உடன்பிறப்பின் அக்கறையோடு கவனித்துக்கொண்ட மாமனிதன்..

சந்தோச தருணங்களில் நண்பர்கள் ஆயிரம் பேர் வருவார்கள்..கஷ்டப்படும் தருணம் தான் நமக்கு உண்மை நண்பனை உணர வைக்கும் என்பார்கள்..நான் உணர்ந்த தருணம் அது.

எதை சொல்வது..எதை எழுதுவது.....பக்கங்களுக்கும் ,எழுத்துக்களுக்கும் அப்புறம் பற்றாக்குறை வந்துவிடும்.

நான்கு ஆண்டு கல்லூரி வாசம்...அப்புறம் வேலைக்கு சென்றப் பின்னும் அறை தோழனாய் ஆறு ஆண்டுகள்..காலம் ஓடியது தெரியவில்லை...

இன்னும் நான்கு நாட்களில் அவனுக்கு கல்யாணம்...மறக்க இயலாத நாளின்று..பிரியா விடை கொடுத்து கண்ணீர் மல்க என் அறையிலிருந்து அனுப்பிவைக்கிறேன்..என் தோழனை...வருங்காலம் வசந்தமாக வாழ்த்துக்களுடன்...

Widget byLabStrike


10 comments:

 1. நட்பின் பிரிவு அது ஆண் என்றாலும் சரி பெண் என்றாலும் சரி
  தாங்கமுடியாத வேதனை தரும் தும்பியல் சம்பவம்.நானும் என்
  வாழ்க்கையில் இது போன்ற சம்பவங்களை சந்தித்தது உண்டு .
  இயற்கையின் விதி என்பதா?தண்டனை என்று சொல்வதா ?
  உனக்கு அந்த இயற்கையே காலத்தின் ஊடாக மிக சிறந்த
  மருந்து ஒன்று வைத்திருக்கும் ,கவலைவிடுங்கள் நாம் எல்லோரும்
  சேர்ந்து வேலுவை சந்தோஷமா இரு என்று வாழ்த்துவோம் .........................

  ReplyDelete
 2. ஆமாம் நண்பரே... மனதில் இடம் பிடித்த நண்பர்களை பிரியும் போது ஏற்ப்படும் வலி...

  ReplyDelete
 3. உன் நண்பனுக்கு என் வாழ்த்துகள்! உனக்கு என் முதன்மை வாழ்த்துகள்... உன் திருமனத்திற்கு!

  ReplyDelete
 4. புன்னகை மன்னர், நண்பர் வேலுவிற்கு திருமண வாழ்த்துகள்...

  ReplyDelete
 5. ஆம் சகோதரா நட்பின் பிரிவுகள் மிகவும் வேதனைக்கரியது.... இப்போதும் நான் ஒரு குழுப்படத்தை பார்த்து அடிக்கடி கண்ணீர் சிந்துவதுண்டு 58 பேர் எமது வன்னிப் பாடசாலையில் ஒரு நிகழ்வில் எடுத்த படம் அதில் அரைவாசி கூட இப்பொழுது உயிருடன் இல்லை....

  ReplyDelete
 6. வாழ்த்துக்கு அவர் சார்பாக என் நன்றி நண்பரே..

  ReplyDelete
 7. மிக்க நன்றி நண்பரே உங்கள் முதல் வாழ்த்துக்கு...இப்போதான் 14 வயசு ஆகுது அதுக்குள்ள கல்யாணம் பண்ணிக்க சொல்றீங்களே நண்பரே!!!

  ReplyDelete
 8. எவ்வளவு வலி..எத்தனை உடன்பிறப்புக்கள் மண்ணில் விதைந்திருக்கிறார்கள்... உண்மையில் வலிக்கிறது... விதைந்தவர்கள் விருட்சமாய் எழுவார்கள் ..வெல்வோம்..
  உங்களுக்கு உடன்பிறப்புக்களாய் நாங்கள் அனைவரும் இருக்கிறோம்..கவலைப்படாதீர்கள் சகோதரி..

  ReplyDelete
 9. பிரிவால் நீங்கள் வாடினாலும் நட்பின் வாசம் என்றும் இதயத்தில் வீசும்..

  நண்பர் வேலுவிற்கு திருமண வாழ்த்துகள்

  ReplyDelete
 10. ஆமாம் நண்பரே...உங்கள் வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி..

  ReplyDelete