Monday, September 6, 2010

நிர்வாணம்-9

கல்லூரி-முதலாண்டு
Picture courtesy:The Art Renewal Center

மெலிதாய்....கல்லூரிக் கனாவில் மிதந்து..மிதந்து..தீர்க்கமாய்..

கல்லூரியின் 150 வது வயதில் நுழைந்த போது என் எண்ணங்கள் வண்ணமாயின.

சென்னை மையத்திலே ஓர் சிறிய கிராமம்

கம்பீரமாய் காவல் நிற்கும் மரங்கள்

செதுக்கப் பட்ட சிற்பமாய் சிவப்பு கட்டிடம்

வயது போயும் வறட்டு கௌரவத்தில் வெள்ளை மாளிகை

சூரியன் இன்னும் சுதந்திரம் தேடும் பூமி

-இதுதான் என் கல்லூர்ரிக்கான விலாசம்.

College of Fine Arts,chennai.. By Ravages

கல்லூரி நூலகம் என் தூசுப் பட்ட உள்ளத்தை துவ(வா)ட்டிக் கொண்டிருந்தது.

புத்தகங்களின் பெரும் பகுதியை..அந்த..ச்சீ..(நிர்வாணம்)படங்களே சிறை கொண்டிருந்தன.

அந்தப்படங்களை சிறிது சிறிதாய் கிறுக்கிப் பார்ப்பேன்..ஒழித்து..ஒழித்து..

அதனைப்பற்றிய முழுமையான அறிவு,அறிதல் இல்லை அப்போ..

உணர்ந்தேன் ஓராண்டு ஓடி இருந்தது.

அடுத்து.. நிர்வாண வகுப்பில் உங்களை சந்திக்கிறேன்...


Widget byLabStrike


4 comments:

  1. புகைப்படம் நன்றாக இருக்கிறது... உங்கள் கல்லூரியின் புகைப்படத்தை சொன்னேன்... ஹீ ஹீ...

    ReplyDelete
  2. புகப்படக்கலைஞரின் அருமையான முயற்சி...அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..

    ReplyDelete
  3. நிர்வாணம் பாடாய் படுத்துகிறது,...

    தொடருங்கள்.

    ReplyDelete
  4. நிச்சயம் தொடர்கிறேன் நண்பரே..

    ReplyDelete