கல்லூரி நான்காமாண்டு :

தினமும் கிறுக்கல்..நிர்வாண ஓவியங்கள்..anatomy study ..
முதலிலே... எங்கள் வீட்டிலே கூட விபரீதமாய் விளைந்தவர்கள்..
அறியவைத்ததும் புரிந்தவர்களாயினர்..
அப்போ..ஏற்ப்பட்ட எண்ணம்..நித்தம்..நித்தம்..திண்ணமாய்..
தோன்றி..தோன்றி..என்னுள் ஊன்றி..
ஆம்... இதை பற்றி தெரியாதவர்களுக்கும்...
பொதுமக்களுக்கும்..
புரிய வைத்தால்..அறிதவர்களாகிவிடுவர்...
அதன் நோக்கமே..நிர்வாணம் எனை ஆராய வைத்தது.

ஏன்?அது என்ன அசிங்கமான விசயமா??நம் உடலை நாம் நிர்வாணக் கோலத்தில் பார்ப்பதில்லையா??
அம்மணமாய்..எத்தனை முறை அலைந்திருக்கிறோம்..மழலைப் பருவத்தில்..
பிறகேன்??அது ஓர் அன்னியப்பட்டதாக,ஒதுக்கப்பட்ட விசயமாக,தேவையற்றதைப் போல,சமுதாயத்தால் நிர்மாணிக்கப் பட வேண்டும்.
அந்தரங்கத்தில் அவசியமில்லையா??மருத்துவத்திற்கு ஆதாரமில்லையா??
புற உடலைக்காணல் என்பது சபிக்கப்பட்ட விசயமா??
கலை ஆர்வலரும்,முன் கூறியுள்ள துறையினரும்,நிர்வாணம் தேவை என்று கூறுவதில் ஆச்சர்யமில்லை..
ஏனெனில்,
அத்துறையின் ஆதார விசயங்களை அது அடக்கி வைத்திருக்கிறது..
அப்போ..கலைத்துறையினருக்காக எங்களை நாங்கள் மாற்றிக் கொள்ள வேண்டுமா?
உங்களின் தேவைக்காக...மற்றவர்களின் மனதிலே சலனத்தை எற்ப்படுத்து கிறீர்களா?
என்று கூட ஆங்காங்கே பொதுமக்களிடம் கேள்விக்கணைகள் வருகின்றன.
ஆமாம்...பொதுமக்களுக்கும்,நிர்வாணத்திற்கும் என்ன சம்மந்தம் என்று கூட கேட்கத் தோன்றும்.
ஏன் இல்லை..ஒரு ஓவியம் அல்லது திரைப் படம் எதுவாயினும்,ஆதாரமான பொதுமக்களை நோக்கியே புறப்படுகின்றன.
நிர்வாணம் பொதுமக்களைப் பொறுத்தவரை திணிக்கப்பட்ட விஷயமாகக் கூட தீர்மானிக்கப் படுகிறது.
அதன் காரணமும் ஆராயப்பட வேண்டும்.
நிர்வாணம் நீடிக்கும்..
நண்பரே
ReplyDeleteமனித மனம் குப்பைத் தொட்டி போன்றது. இதைப் பார்ப்பவர் இதையும் தவறாக நினைக்கலாம். தாங்கள் சொல்வது புரிந்துகொள்பவர் சிலரே!
அதெல்லாம் உளவியல் சம்பந்தப்பட்ட விஷயம் நண்பரே...
ReplyDeleteஆமாம் நண்பரே...முடிந்தவரை நம் கருத்துகளை தெளிவு படுத்த முயற்சிப்போம்..அவ்வளவே..நன்றி
ReplyDeleteஆமாம் நண்பரே..
ReplyDeleteபடங்கள் அருமை நண்பா.
ReplyDeleteநன்றி அன்பரே..
ReplyDeleteநிர்வாணத்தினை புரிந்து கொள்வது என்பது சாமானியர்களுக்கு கடினமான காரியம். ஆதாமும் ஏவாலும் கனியை உண்டபின் முதலில் செய்தது ஆடை அணிந்ததுதான் என்கின்றார்கள்.
ReplyDeleteமிருகங்களிடமிருந்து தனித்துகாட்ட ஆசைப்பட்டு உடை, நாகரீகம், திருமணம் என்ற சடங்குகளால் சித்தரிக்கப்பட்டவனாக மாறிவிட்டான் மனிதன்.
நிர்வாணம் தனிமையில் கிடைக்கின்ற சொத்தாக மாறிவிட்டது. சிலருக்கு அது வாய்ப்பதே இல்லை.
ஆமாம் நண்பரே...நன்றி நல்ல கருத்துகளை சொன்னீர்கள்..
ReplyDelete