Tuesday, September 21, 2010

நிர்வாணம்-11

முந்தைய பதிவு: http://wp.me/pFau0-H6

கல்லூரி மூன்றாமாண்டு:



இந்த ஆண்டு..அடிக்கடி அவ்வகுப்பு (நிர்வாணம்) எங்களை ஆட்க்கொண்டிருந்தது..

அந்தப் பாடம் எல்லோருக்கும் பரிச்சயப்பட்டு போயிருந்தது.

மாணவ மாணவிகளுக்கு முன்பிருந்த பதற்றம் இப்போ இல்லை,

எல்லோரும் நிர்வாணத்தை பார்த்து பழகிப் போனவர்களாயிருந்தனர்.

மச்சி..இன்னைக்கி நியூட் (NUDE ) கிளாஸ் டா..

அந்த வார்த்தை எமக்கு பதட்டத்தை தரவில்லை..

பழைய ஆர்வத்தை தூண்டவில்லை..

அப்படியா மச்சி..சரி நீ கிளாஸ் கு போடா என்று சொல்லி,

கல்லூரி குட்டி சுவர்களில் குடியிருக்க தொடங்கி இருந்தேன்.

அம்மண பெண்ணைப் பார்க்க அலைப் பாய்ந்த மனது

நிர்வாணப் பெண்ணைப் பார்க்க ஏங்கிய வயதுக்கு..

இப்போ..என்ன ஆனதோ தெரியவில்லை.

ஞானம் வந்து விட்டதோ!!

ஆமாம் போதி மரம் இல்லாதக் குறையை

நிர்வாண வகுப்பு நிவர்த்தி செய்திருந்தது.



ஆபாசம்,அழகியல்,காமம்,கலை

என்பனவெல்லாம் பார்க்கும் பார்வையில் என்பதை,பகுத்துணர பழக்கப் படுத்தியிருந்தது.

முடிந்தது மூன்றாண்டு..

(நான்காம் ஆண்டில் சந்திக்கிறேன்..)


Widget byLabStrike


11 comments:

  1. ஞானம் பெற்று விட்டீர்கள்... பௌத்தத்தில் சொல்ல வேண்டுமானால், நிர்வாணத்தை அடைந்த வருடம் உங்களது மூன்றாமாண்டு...

    ReplyDelete
  2. ஆமாம் நண்பரே..நான் முக்தி அடைந்தது மூன்றாம் ஆண்டில் தான்.

    ReplyDelete
  3. அசத்தல். நிர்வாணம் என்பதை இறுதி நிலை என மதங்கள் விவரிக்கின்றன. அதைக் கடந்துவிட்ட நீங்கள், அடுத்தாக என்ன செய்யப்போகின்றீர்கள் என பார்க்கிறேன்.

    ReplyDelete
  4. நன்றி நண்பா...தங்கள் ஆதரவுக்கு நன்றி..அடுத்து என்ன என்பதை எழுதுகிறேன்..

    ReplyDelete
  5. கண்ணில் காட்சி தோன்றிவிட்டால் கற்பனை தீர்ந்துவிடும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

    நிர்வாணத்தை காமம் அல்லாத கலை கண்ணோடு பார்க்க ஆரம்பித்துவிட்டால் அதுவும் ஒரு அழகுதான்.

    ReplyDelete
  6. The selection of the picture is great. very much siutable to the contents.

    ReplyDelete
  7. அனைத்துமே பார்க்கும் பார்வையில் தான் என்பதை உங்கள் வரிகள் அழுந்தச் சொல்கிறது...அருமை

    ReplyDelete