Monday, September 13, 2010

நிர்வாணம்-10


கல்லூரி- இரண்டாம் ஆண்டு:

ஸ்க்ரீன் மூடப்பட்டு..அறை சாத்தப்பட்டிருக்கிறது.

மச்சி..இன்னைக்கி நியூட் (NUDE ) கிளாஸ் டா..சக தோழனின் குரல்.

பழக்கப்பட்ட வார்த்தை.எப்போ வருமென்று ஏங்க வைத்த பாடம்..

அவள் வந்து அமர்ந்தாள்..முழு அம்மணம்..

மின்விளக்கு,தன் மோகப்பார்வையால் அவளை விழுங்கிக் கொண்டிருக்கிறது.

சுற்றி வகுப்பு தோஸ்துகள்..பசங்க(மச்சி..ஸ் )..பொண்ணுங்க(மச்சினி..ஸ்)..

கூச்சமிகுதியில் பெண்கள்..ஆர்வமிகுதியில் ஆண்கள்..

எல்லோர் பார்வையும்..எங்கோ..எதையோ உற்று நோக்குகிறது...

அனைவரும் வார்த்தைகள் வற்றிய நிலையில் காணப்பட்டனர்.

20 பேர் ஒன்றாய் கூடி ஓர் பெண்ணை அம்மணமாய் பார்க்கும் அனுபவம் அன்று..

அதுவும்..ஆண்களும்..பெண்களும் ஒன்றாய் வேறு..

உற்சாகம் ஓர் புறமென்றாலும்..மறுபுறம் பதற்றம்..

அம்மணத்தின் அழகியல்,அனாடமி அவசியம் பற்றி ஆசிரியரின் அறிமுக வுரை..

அற்புதமான தெளிவுரை..

வரையச்சொன்னார்கள்..MODEL STUDY-யாம் .

பக்குவப்படாத மனசு..பார்த்தறியாத கண்கள்..சற்று உடல் வேர்த்தது.

இருந்தும்..கொஞ்சம்..கொஞ்சமாய்...மனதை தேற்றி..தேற்றி...கோடுகளிட்டேன்.

அம்மணம் அழகாய் என் ஓவியத் தாளில் உலாவர..

கலைத்தாய்...என்னுள் கண் விழித்தாள்..காமம் கலைந்தாள்..

அம்மணம்..அடையாளம் மாறி..நிர்வாணம் என்னுள் நிறைந்தது.

கரைசேர்கிறேன்..என்னுள் கறைப் படிந்த எண்ணங்களைக் கைவிட்டு..

மூன்றமாண்டில் சந்திப்போம்...


Widget byLabStrike


12 comments:

  1. பக்குவமில்லாத பார்வைகளையும் கடந்து அந்தப் பெண் எப்படி இருந்தாள் என்பதை அறிய முடிகிறது. ஒரு ஞாநியாக, மற்றவர்களுக்கும் ஞானம் போதிப்பவளாக தெரிகின்றாள் அந்த நிர்வாணப் பெண்,...

    ReplyDelete
  2. கிடைத்தற்கரிய புகைப்படங்களை இட்டிருக்கின்றீர்கள், ஒரு அழகியின் முழு அழகு இடுகைக்கு இனிமை சேர்க்கின்றது.

    ReplyDelete
  3. எல்லாம் பார்க்கும் கண்ணில் தான் இருக்கிறது என்பதை பலப்படுத்தி விட்டீர்கள் சகொதரா...

    ReplyDelete
  4. ஆமாம் நண்பா..இன்று பல புகழ் பெற்ற ஓவியர்களை அவளின் ஞா(தா)னம் உருவாக்கியிருக்கிறது.

    ReplyDelete
  5. ஆமாம் நண்பரே..காமமும்,கலையும் நம் கண்ணோட்டத்தை சார்ந்தது....

    ReplyDelete
  6. அனாடமி வகுப்பின் அனுபவம் , மறுபடியும் உங்களுக்காக பிறந்த உடையை அணிந்திருக்கிறாள்.
    அவள் உங்கள் ஓவியத்திற்கு உறுப்புக்களை கொடுத்துவிட்டு , அவள் ஓவியம் ஆகிவிட்டாள் போலும்.
    நன்றி நண்பா! உன் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு!

    ReplyDelete
  7. ஆமாம் ...நன்றி நண்பரே..

    ReplyDelete
  8. உங்களின் உரைநடை கூட, கவிதை நடையாக இருக்கிறது நண்பரே...

    ReplyDelete