Saturday, August 21, 2010

செவ்வாய் கிரகத்தில் மேல்படிப்பு…..


அதிகாலையில் ஓர்

அற்புத கனவு.

தாத்தா..தாத்தா..

ஹையர் ஸ்டடிஸ்

படிக்கணும்.

என்ட்ரன்ஸ் எக்சாம்

பாஸ் பண்ணிட்டேன்.

பாஸ்போர்ட்..விசா

ஓகே ஆச்சு..

எமிகிரேசன் எல்லாம்

முடிஞ்சி போச்சி.

நம்ம பக்கத்து

ஊரு அமெரிக்காவுல

இருந்து என் பிரண்ட்

வரான்.

ரெண்டு பேரும்

சேர்ந்து வெளிநாடு  போறோம்.

நல்ல காலேஜ் ஜாம்

ஹாஸ்டல் சூப்பராம்.

போயிட்டுவரேன் தாத்தா

ஆசீர்வாதம் பண்ணுங்கோ..

என்கிறான் பேரன்.

நாள்காட்டி

1ஜூன் 2075

என விலாசம் சொல்கிறது.

எந்த நாடு

எந்த காலேஜ்

எத்தனை மணி பிளைட்

என்கிறேன் நான்.

மார்ஸ்..

செவ்வாய் கிரகத்திற்கு

செல்கிறோம் யாம்.

அவன் சொல்லி முடிக்கையில்

காலேஜ் ராக்கெட்

என்ற போர்டு

மாட்டி

வாசல் முற்றத்தில்

வந்து நிற்கிறது

இரும்பு பறவையொன்று.

அது ஏறிப்போகும்

இரைச்சலில்

எழுகிறேன் நான்.

வெளியில்

பசியின் பிடியில்

பிடிப்பட்ட

தெருநாயொன்று

நிற்காமல்

குறைத்துக் கொண்டிருக்கிறது...


Widget byLabStrike


No comments:

Post a Comment