Thursday, August 19, 2010

களவு போன இரவுகள்..

ஏனோ...சமீப நாட்களாக பேருந்து நிறுத்தங்களில்,பெரிய அங்காடிகளில்,மென்பொருள் நிறுவனங்களில், ஆங்கில நுனி நாக்கு ஜாலங்களில்,சீறும் இரண்டு சக்கர வாகனங்களில்,ஜீன்சும்,டி சர்ட்டும்,சுடிதாரும்,சேலையும் என விதவிதமான ஆடைகளில் அசத்தும் அழகிகள் கூட என்னில் இருந்து அன்னியப் பட்டிருக்கிறார்கள்..

குச்சிக்கு சேலைப் போர்த்தினால் கூட குறு குறுவென்று அலைபாயும் என் கண்கள்.. கடனே என்று கூட எமை கடந்து போகும் அழகிகளை ஏறெடுத்து பார்ப்பதில்லை..ஏன் என்னானது எமக்கு..இல்லை எம் கண்களுக்கு..??

தூக்கம் இப்போ சில நாட்களாய் எனை தொடர்வதும் இல்லை..தொடுவதும் இல்லை..நீங்கள் நினைப்பது சரிதான்..நோய்தான் பிடித்திருக்கிறது..தூங்கா வியாதி..தூக்கம் தொலைகின்ற,நாமே விரும்பி நம்மை தொலைக்கின்ற வியாதி..நிச்சயம் நீங்கள் எதிர்ப் பார்க்கும் அதே நோய்தான்..

நான் ஒருவேளை தூங்கியிருந்தால் என்னையறியாமல் அந்தப் பெயரைத்தான் புலம்பி இருக்கக் கூடும்..இரவுத் தூக்கம் தான் என்னிலிருந்து எங்கோ இரவல் போயிருந்ததே எப்படி உளறுவேன் அவள் பெயரை.!!என் உயிரை!!

எங்கிருந்து வந்தாள் இப்படி ஒரு ஏஞ்சல்!!ஒருவேளை நான் அவள் படத்தை பார்த்திருக்ககூடாது..இல்லை அவள் அப்படத்தில் நடித்திருக்ககூடாது.இது இரண்டும் நடந்திருந்தால் , என் தூக்கம் தொலைந்து போகாமல் என்னில் முடங்கிப்போயிருக்கும்.ஆனால் அது இரண்டுமே நடந்து விட்டதே..என் செய்வேன்..

இயல்பாய் நன்கு தமிழ் பேசத் தெரிந்தும் ஓர் தமிழனிடமே டமில் அல்லது ஆங்கிலம் பேசுவது பெருமை என திரியும் பெண்கள் (ஆண்களானாலும்)எமக்கு பேய்களாகத்தான் தெரிவார்கள்..ஒருவேளை அவர்கள் நினைக்கக்கூடும் அவர்கள் பெரிய அறிவு மேதையென்று!!அது கற்றல் என்பதறியாமல்..

ஆனால் அவள் பேசும் பிஞ்சு தமிழில் நஞ்சு இல்லை..ஆங்கில வாசத்தில் தமிழ் பேசினாலும் அழகு இருக்கிறது..அவள் வார்த்தையில் அமுதம் தெறிக்கிறது..அவள் இதழ் திறந்து இன்னொரு முறை கொஞ்சு தமிழ் பேசமாட்டாளா என நெஞ்சு தவிக்கிறது..

ஆமாம் மதராசபட்டினம் படம் பார்த்ததிலிருந்து இப்படித்தான் ஏங்கித் தவிக்கிறது என் இதயம்..இத்தனைக்கும் காரணம் அவள்தாள்..மதராசபட்டினம் கதாநாயகி ஏமி ஜாக்சன்..நளினம்..அழகு..வசீகரம்..இன்னும் அடுக்கிக் கொண்டு போகலாம் வர்ணனைகளை..ஒருவேளை அதற்கு மேல் வார்த்தைகள் இல்லாமல், வேண்டுமானால் வறட்சி வரலாம்..

என் தொலைந்த இரவுகளை களவாடிக் கொண்டு போனவள்..அவள்..

சில நாட்களுக்கு முன் சுதந்திர தினத்தன்று நண்பர் ஒருவர் அனுப்பிய குறுஞ்செய்திதான் என் ஞாபகத்திற்கு வருகிறது..

சுதந்திரம் கிடைக்காம இருந்திருந்தா என்ன செய்திருப்போம்?

மதராசபட்டினம் ஆர்யா மாதிரி ஆளுக்கு ஒரு வெள்ளைகார பிகர பிக் அப் பண்ணிருப்போன்னு..னு சொல்லி முடிகிறது குறுஞ்செய்தி.

ஏமி ஜாக்சனை பார்த்து ,எனக்கும் தோன்றியது அதுதான்...சுதந்திரம் கிடைக்காமலே இருந்திருக்கலாம்..

ஏமி புராணம் ஏராளமாய் பாடிவிட்டேன்..மதராசபட்டினம் படத்தைப் பற்றியும் சில வரிகள்:

அழகான மதராஸ் தெரிகிறது..அனைத்து கதாப்பாத்திரங்களும் அப்படியோர் பொருத்தம்..கலைஇயக்கம் கண்கவர்கிறது..மேட் பெயிண்டிங் பற்றி சொல்லியே ஆகவேண்டும்....நல்ல இயக்கம்..மொத்தத்தில் நல்ல படம்அருமை..அருமை

நம் அரசியலை சாக்கடை சாக்கடை என எல்லோரும் சொல்லி கேள்விபட்டிருக்கிறேன்.படம் பார்க்கும் போது அது உண்மை என்று புலனாகிறது.வெள்ளைகாரர்கள் விட்டு விட்டுப்போனவுடன் தேம்ஸ் நதி சாக்கடையாகிறது..கூவம் நதி நாரி நாற்றமெடுக்கிறது.நம் நாட்டு அரசியலைப்போலவே..


Widget byLabStrike


No comments:

Post a Comment