Monday, August 16, 2010

தி எக்ஸ்பெண்டபல்ஸ்



கூட்டத்தின் தலைவனாக, ஸ்டாலோன்.பணத்திற்காக கொடுத்த டார்கெட்ட முடிக்கிறக் கூட்டம் நம்ம ஹீரோ(ஸ்டாலோன்) கூட்டம்.அப்படித்தான் விலீனா என்ற இடத்துல நடக்குற ஒரு எதேச்சதிகார மேட்டர் ஐ முடிக்க, ப்ருஸ் வில்லிஸ் ஸ்டாலோன் ஐ கூப்பிட்டு அனுப்புறார், அந்த டீலுக்கு நம்ம அர்நோல்டையும் வரவைக்கிறார்...இது சும்மா பிஸ்கோத்து வேல அதா ஸ்டாலோன் பண்ணட்டும்ணு சொல்லி விட்டுக்கொடுத்து வெளியேறுகிறார் அர்னால்டு.வில்லிஸ்&அர்னால்டு க்கான காட்சி அத்தோடு முடிவடைகிறது.

ஏற்கனவே ஸ்டாத்தம் லவ்வோ லவ்வுன்னு லவ்விக் கிடக்கிறார் ஓர் பொண்ணு மேல.ஆனா அவ இன்னொருத்தனுக்கு ரூட் விட..பார்ட்டி டென்ஷன் ஆகி நம்ம ஸ்டோலன் கிட்ட பொலம்புது.பொண்ணுங்ககிட்ட பழகினா இதுதான் பிரச்சினையென தத்துவம் பேசுகிறார் ஸ்டாலோன்..அத விடு விலீனா போவோம்.. எதேச்சதிகார கேங் மேட்டர் ஐ முடிப்போம்.. முதல போய் ஏரியாவ பாப்போம்னு னு ஸ்டாத்தம்,ஸ்டாலோன் கிளம்பிப்போக அங்கே ஒரு பிகர் அறிமுகமாகுது..ஜெனரல் மகள் என தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் அப்பெண் ,அங்கு நடக்கிற அக்கிரமங்கள நம்ம ஹீரோ கிட்ட சொல்லுது..அந்தப் பொண்ணு மேல ஸ்டாலோன் கு லவ்வு வந்துருது..வில்லன்களின் கட்டுப்பாட்டில் உள்ளப் பகுதியை சுற்றிக் காட்ட அப்பெண் ஸ்டோலனை கூட்டிப்போக, ஸ்டோலனை(புது ஆள்) பார்த்தவுடனே அங்க வில்லன் ஏரியால செம சண்ட..வில்லன் ஆட்களை ஐடியா பண்ணி அசர அடிச்சி காலிப் பண்ணிறாங்க ஸ்டாலோன் & ஸ்டாத்தம் ..அப்புறம் ஸ்டாலோன் & ஸ்டாத்தம் வானூர்தியில் எஸ்கேப் ஆக ,பிகர் மட்டும் தன் சொந்த மண்ணில் தான் இருப்பேன்..வர மாட்டேன்னு அடம் பிடிக்க, அவளை மட்டும் அங்கேயே விட்டுட்டு இவங்க சொந்த நாட்டுக்கு வந்துறாங்க..

அங்க அந்த பிகர வில்லன் குரூப் கொடுமை பண்ணுது..இங்கு வந்ததும் ஸ்டாலோன்கு மீண்டும் பிகர் மேல பீலிங் வர தனியா நான் போறேன்னு கிளம்புறார்..உடனே ஜெட்லியும் கிளம்ப அங்க ஒரு சண்டை..அப்புறம் ஹீரோ குரூப் மொத்தமா விலீனா போறாங்க.... வில்லன்கள் கதையை முடிச்சி பிகர காப்பாத்துறாங்களா இல்லையாங்கிறது தான் கதை.

ஒரு டஜன் கு மேல் ஹாலிவுட் முன்னணி நடிகர்களை உள்ளே அள்ளிப்போட்டு தானே டைரக்ட் பண்ணி விளையட்டுக்காட்டியிருக்கிறார் ஸ்டாலோன். முன்னணி நட்சத்திரங்களாய் இருந்தாலும் ஓரணி மன்னிக்க இரு அணி(வில்லன் கூட்டம்,ஹீரோ கூட்டம்) ஈகோ இல்லாமல் சேர்ந்து நடித்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம்.தமிழ் நடிகர்கள் ,இதெல்லாம் பார்த்தாலும் ,திருந்த மாட்டாங்க..ஆனால் ஒவ்வொரு நடிகரையும் வில்லிஸ்,ஜெட்லி,ஸ்டாலோன்,ஸ்டாத்தம் என தனித்தனிப் படங்களில் பார்த்த வேகம்,சுவாரஸ்யம் இல்லை.புதியக் கதை அல்ல..பழக்கப் பட்ட கதை தான்..கிழடு தட்டிய நடிகர்கள் இணைந்திருந்தாலும் வேகத்தில் இளமையின் துள்ளல்..உள்ளே போனது தெரியல ..எண்டு டைட்டில் போடுகிறார்கள்..அவ்வளவு வேகம்..

Widget byLabStrike


4 comments:

  1. ம்.தமிழ் நடிகர்கள் ,இதெல்லாம் பார்த்தாலும் ,திருந்த மாட்டாங்க..

    ஆமாம்..ஆமாம்.ஆமாம்

    ReplyDelete
  2. இத்தனை பேர் இணைந்திருக்கிறார்களே கதை புதுமையாக இருக்கும் என நினைத்திருந்தேன். ஏமாற்றிவிட்டார்கள்.

    ஆனால் படம் வேகம் என்பதால் அந்தக் குறை தெரியாது.

    படத்தினை எல்லோரிடமும் கொண்டு சேர்த்திருக்கின்றீர்கள். நன்றி!

    - ஜெகதீஸ்வரன்,
    http://sagotharan.wordpress.com/

    ReplyDelete