Sunday, August 15, 2010

எது சுதந்திரம்? எங்கே சுதந்திரம்?




  • மேல்சாதி-கீழ்சாதி


மேல்மட்டம்-அடிமட்டம்

கொத்தடிமை-கூலிக்காரன்

ஆண்டை-அடிமை

சாதிமத அடிதடியில்

சாதனை இந்தியன்

-ஆனாலும்

சமத்துவ இந்தியாவாம்!!

விடுதலை என்றார்கள்

யாருக்கென்று தெரியவில்லை?

--------------------------------------------------


  • என்னினம் இறந்தாலும்


அழக்கூட அனுமதியில்லை

இனத்தால் நீயிங்கு

இணைவதற்கு இடமில்லை

மீறி இணைந்து பார்

சிறையிலே நீயிறுக்க

ஏனைய அறையுண்டு.

வாயை மூட

வந்தது சட்டம்.

எழுதுவதை தடுக்க

எழுகிறது திட்டம்.

சுதந்திரநாடு என்றார்கள்

அர்த்தமெனக்கு புரியவில்லை.



Widget byLabStrike


3 comments:

  1. மேலே இருக்கும் படம் ஒன்றே போதும் சொல்ல வந்ததை தெளிவாக சொல்கிறது உங்கள் கவிதையும் அருமை

    ReplyDelete
  2. நண்பரின் ஆதங்கத்தை நானும் வழி மொழிகிறேன்... சுதந்திரமாம்... புடலங்காவாம்... பெரியார் சொன்ன மாதிரி அது ஒரு துக்க நாள்.

    ReplyDelete