Wednesday, August 11, 2010

எங்களை விரட்டிக் கொண்டு வந்த மழை!!

இன்றைய பதிவு, நானும், நண்பர்களும் ஏலகிரி சென்ற பயணத்தின் பகிர்வு..

சென்ற சனி,ஞாயிற்றுக்கிழமை நிகழ்வு..

(புகைப்படத்தின் உள்ளே நண்பர்கள்..வெளியே நான்)

முடிவெடுக்கப்பட்டு விட்டது..வரும் சனிக்கிழமை சரியாக அலுவலகம் முடிந்து ஆறு மணிக்கு கார் வந்துவிடும்..கிளம்ப வேண்டும் என்பது திட்ட ஏற்பாடு.

திட்டம் முடிவெடுக்கப்பட்டதிலிருந்து,பழைய சுற்றுலா பயண நினைவுகளின் அசைப் போடல்கள் நண்பர்கள் மத்தியில்..

ஏற்கனவே ஒருமுறை நண்பர்கள் அனைவரும் ஏலகிரி சென்றிருக்கிறோம்...நண்பர் நாண்டி என்கிற நந்தகோபாலை தவிர..எனவே நம்ம நாண்டிக்கு ஏக எதிர்பார்ப்பு..எங்கெங்கு போகலாம்..என்னென்ன செய்யலாம் என்கிற திட்ட வரையறைகளை தினமும் வகுக்கலானார்.

உற்சாக பானம் உள்ளே போகிற போது நெளிந்து ஆடுவார் பாருங்க பாம்பு நடனம்...அப்பப்பா அதுக்கு ஏனைய பான்ஸ் எங்க கூட்டத்துல..

திட்டம் தீட்டி,தீட்டி பட்டை தீட்டப்படுகிறது..

சில இயலாதக் காரணத்தால்,ப்ரேமாலும்,கார்த்தியாலும் வரஇயலாது போய்விட...சற்று மனக்குறையோடு பயணம் ஆரம்பிக்க இருக்கிறோம்..

ப்ரவீனோடு சேர்ந்து..கார் காரன் அடித்து விட்டான் ஆப்பு..ஆப்பு ஒருவழியாக ஆப் ஆகி, இன்னோர் மகிழ்வுந்து ஏற்ப்பாடாகி,இரவு 8 மணிக்கு அண்ணன் சந்துரு,சுதாகர் அண்ணா,அன்பு,நான்டி,பிரவீன் நான் மற்றும் ராஜகுரு இவர்களோடு மகிழ்வு அலுவலக இடத்திலிருந்து ஆரம்பமாகிறது..

நீராகாரத்தை ஆரம்பித்து வைத்து விட்டு ராஜகுரு கிளம்ப..கார் அலுவலகத்தை விட்டு கிளம்புகிறது..

ஆரம்ப இடத்திலிருந்து மச்சி என்று மலையேற ஆரம்பித்து விட்டான் தம்பி பிரவீன்..மலையேற்றத்தின் உச்சமாய் உண்டதை கக்கி உறங்கி எழுகிறான்....விழுகிறான்.

இடைவழியே உணவுண்டு..ஏலகிரி மலையில் எங்களோடு ஏறுகிறது கார்.இரவு இரண்டு மணிக்கு சாரல் இன்னில்,நெருப்போடு கூத்து ஆரம்பமாகிறது.நிற்காத ஆட்டம் நிறைவேறுகிறது.

ஆடுகின்ற கூத்து அகமகிழ, ட்ரவுசர் பாண்டியை ஞாபகப்படுத்தும் கோலத்தில் சந்துரு அண்ணன்,இறக்கம் இல்லாமலே கிறக்கத்தில் சுதாகர் அண்ணா,பாம்பு நளின நடனப் புயல் நான்டி,சிறப்பு சிரிப்பு  மன்னன் அன்பு,அன்றைய ஆட்டனாயகனாய் பிரவீன்...ஆடத்தெரியாத ஆட்டத்தில் நான் என சொல்லொண்ணா கூத்து..சொல்லிக்கொண்டே இருக்கலாம் ரகளைகள்..

ஆட்டம்,பாட்டம்,கொண்டாட்டம் குதூகலிக்க இரவு நான்கு மணிக்கு,அனைத்தும் முடிந்து உறங்கி காலை எட்டு மணிக்கு எழுந்து விழிக்கிறோம்..

காலை உணவு முடிந்து,சிவன் மலையை நோக்கிய செவனே என்று நடை பயணம் ஆரம்பமாகி உட்கார்ந்து,எழுந்து,நடந்து,தட்டு தடுமாறி மலையேறி சிகரமேறிய திளைப்பில்,வெற்றிக் களிப்பில்...வீறுகொண்டு இறங்கினோம்..இனிதே பயணம் முடிந்து தாகத்திற்கு மீண்டும் ஒருமுறை தண்ணீர் அருந்திய..

நாண்டி டையலாக் :பயணம் முடிந்து கிளம்பும் போது...யாரும் தூங்கக்கூடாது..have fun பண்றோம் ஓகே..என்று சொல்லி தூங்கி வழிகிறது(நான்டி) பயணம் நெடுக.பயணம் have fun ..

விடைபெறுகிறோம் ஏலகிரியை விட்டு..ஏலகிரியில் இருந்து எங்களை விரட்டிக் கொண்டு வருகிறது மழை..இதோ கொட்டி தீர்க்கிறேனென்று ,கூடவே வருகிறது மழை மேகங்கள்..சென்னையில் வந்து நாங்கள் இறங்க ,மழை சுமந்து வந்த மேகங்களும் தன் சுமையை இறக்கி வைத்துவிட்டு bye சொல்லி விடைபெறுகிறது எங்களிடம்...

(நல்ல மனுசங்க இருக்க இடத்துல தான் மழை பெய்யுமாம்..அன்று அது கன்பார்ம் ஆச்சு!!ஹ..ஹா..)

Widget byLabStrike


4 comments:

  1. நண்பர் நான்டியின் பாம்பு நடன படம் ஒன்று வெளியிட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்...

    ReplyDelete