
நீயும் இருக்கியே ..மக்கு..என்ன படிச்சி என்ன கிழிக்கப் போறியோ தெரியல என்று ,தன் பிள்ளைகள் மீது ஆதங்கப் படும் பெற்றோர்கள் ஏனைய இல்லங்களில் இன்னும் இருக்கதான் செய்கிறார்கள்..
படிப்பை விட, கடின உழைப்பு,விடா முயற்சியே ஒருவரை வெற்றியடைய செய்யும்.ஏன் பத்தாவது படித்திருந்தால் கூட போதும், ஐ.ஏ.எஸ் ஆக முடியும், என்று நிரூபித்திருக்கிறார் ஒருவர்.அவர்தான் முனுசாமி.
ஒன்று UPSC தேர்வெழுதி ஐ.ஏ.எஸ். அதிகாரியாவது ,மற்றொன்று பதவி உயர்வு மூலம் ஐ.ஏ.எஸ். அதிகாரியாவது.பதவி உயர்வு மூலம் ,இந்த ஆண்டு தமிழகத்தில் 19 பேர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகி உள்ளனர்.அதில் முனுசாமியும் ஒருவர்.
1973ம் ஆண்டு குரூப் 4 தேர்வு மூலம் அரசுப் பணியில் சேர்ந்த முனுசாமி பள்ளிப்பட்டு தாலுகாவில்,18 வயதில் இளநிலை உதவியாளராக பணியை தொடங்கி உள்ளார். பின்னர் வட்டாட்சியர், துணை ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் என பதவி உயர்வுகளை பெற்றுள்ளார்..
அரசுத்துறையில் பல்வேறு பணிகளில் 37 ஆண்டு கால நீண்ட அனுபவம் பெற்று,பணியில் சிறப்பாக செயல்பட்டதுமே, அவருக்கு ஐ.ஏ.எஸ். தகுதியை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது..
உழைப்பே உயர்வுக்கு வழி.... நம்மில் பல முனுசமிகள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள், ஏட்டு கல்வி மட்டும் இருந்தால் போதாது அனுபவ அறிவு மூலமும் உயர்வு பெறலாம் என்பதற்கு முனுசாமி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு
ReplyDeleteithukku evvalavu kaalam kaatthu irunthaar?
ReplyDelete30 vayathil IAS aakalaam padiththal!
ஆமாம் நண்பரே,முயற்சி உடையார் என்றும் இகழ்ச்சி அடையார்..முயற்சியை தளர விடக் கூடாது என்பதக்காக தான் அவரை மேற்கோள் காட்டியுள்ளேன்.மற்றபடி ஒழுங்காக படிக்க கூடாது என்பதல்ல,நான் எழுதியதன் நோக்கம்.
ReplyDeleteஅன்பின் படைப்பாளி
ReplyDeleteநல்லதொரு இடுகை - படிப்பறிவை விட பட்டறிவின் மூலம் இந்திய ஆட்சித்துறைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது பாராட்டத் தக்கது. நன்று நன்று
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
நன்றி நண்பரே..
ReplyDeletethanks..
ReplyDeletethank you....
ReplyDeletethanks
ReplyDeletenandri..
ReplyDeleteநல்ல விஷயம் சொல்லி இருக்கிறாய் நண்பா ! ! !
ReplyDeleteமிக்க நன்றி தோழி!
ReplyDelete