Sunday, August 1, 2010

தொட்டு விடும் தூரம் நட்பு1935 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சனிக்கிழமை அமெரிக்க அரசாங்கம் ஒருவரை கொலை செய்தது..மறுநாள் அவரின் உயிர் நண்பர் ஒருவர் அவருக்காக தற்கொலை செய்து கொண்டார்.

அவர் நினைவாக அமெரிக்க அரசாங்கம் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமையை நண்பர்கள் தினமாக அறிவித்தது..

இந்த செய்தி சொல்லும் கருத்து உண்மையோ,பொய்யோ தெரியாது-என் அலைபேசிக்கு வந்த சுவாரசியமான குறுஞ்செய்தி அது...எது எப்பட்டியோ அந்தக் கதையுள் ஓர் ஆழமான நட்பு பரிபூரனமாகிறது..உயிர் கொடுப்பான் தோழன் என்ற கருத்தை உண்மையாக்கு கிறது.

இந்த தருணத்தில்,முக்கியமாய் இந்த நாளில் என் வாழ்வில் மறக்க இயலாத இடத்தை பிடித்த சில நண்பர்களைப் பற்றி நினைவுகூர்கிறேன்.

பள்ளி வாழ்க்கையில் பல நண்பர்கள்,ஆடினோம்,பாடினோம்,கூத்தாடினோம் என்று..ஒவ்வொரு தருணத்தில் ஒவ்வொருவர் நினைவில் வருவர்..அவர்களில் பத்தாம் வகுப்பு வரை என்னோடு படித்த கலைச்செல்வன்,திருமாவளவன்,வெங்கடேஷ்,சேட்,சுடர்மணி முக்கியமானவர்கள்.இன்றும் என்னுடன் நட்பை நீட்டித்துக் கொண்டிருப்பவர்கள்.பனிரண்டாம் வகுப்பில் எங்கள் நெட்வொர்க்கையே இன்றும் கட்டி காப்பாற்றி வரும் செல்வராஜ் குறிப்பிடத்தக்கவர்..

அடுத்துக் கல்லூரி

...அப்பப்பா...மறக்க முடியுமா..நினைக்கும் போதே நெஞ்சிலே நிழலாடுகிறதே அந்த நாட்கள்..திரும்பவும் கிடைக்காதா??அதே நண்பர்களுடன் மீண்டும் படிக்கும்மோர் பாக்கியம் கிடைக்குமா?? என்று என்னை ஏங்க வைக்கும் நண்பர்கள்..உயிர் தோழர்கள் ஒன்றுக் கூடிய இடம்..

நினைவுப் படுத்தவேண்டுமானால் ஏனைய நண்பர்கள்,எல்லோரும் உயிர் நண்பர்கள்..பெயர் விட்டுப் போகவும் வாய்ப்பிருக்கிறது..பெயர் விடுப்பட்டிருப்பின் தயவு செய்து யாரும் வருத்தம் கொள்ள வேண்டாம்.இங்கே நான் குறிப்பிடப் போகும் ஒவ்வொரு நபரையும் பற்றி எழுதுவதென்றால் தனித்தனி பதிவு எழுதிட வேண்டும்..அவ்வளவு இருக்கிறது குறிப்பிட..பின்னொருநாளில் நிச்சயம் ஒவ்வொருவர் பற்றியும் தனித் தனியாய் பதிவெழுத வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது..

கணேஷ்:என் கல்லூரி வாசலை நுழைவுத்தேர்வுக்காக மிதிக்கும் போதே என்னில் ஆழமாய் நட்பை விதைத்த மாமனிதர்..நான் கல்லூரியில் சேர களம் அமைத்தவர்..

அமீர்,வேலு,மூர்த்தி,செல்வன்:என் சக வகுப்பு கல்லூரித் தோழர்கள்,ஒரே விடுதியில்,ஒன்றாய் உண்டு,உறங்கி ஒருவருக்காய் மற்றவர் அழுது,ஒன்றாய் சிரித்து நட்புக்குக்கு இலக்கணமாய் இன்றளவும் தொடரும் உயிர் நண்பர்கள்.

பரிதி,கார்த்தி,மேத்யூ,பாபு,உதயா,ராம்கி,வினோபா,சுஜேஷ்,துரை,ஜெகன்,சத்யா,ஜோசப்,ஜெயவர்தன்,பாலா,பார்த்திபன்,சூடாமணி,கேசவன்,ராமு,சேட்டு(தயவுசெய்து நண்பர்கள் பெயர் விடுப்பட்டிருப்பின் மன்னிக்கவும்) நட்பிலே தீவிரவாதிக் கூட்டமும் நமக்குள் அடக்கம்.அனைவரும் இணைந்தால் ரகளைக்கும்,அட்டகாசத்திர்க்கும் அளவிருக்காது.

ராகுல்,அருண்,சசி,சுசி,ராமு,விக்ரம் சக்கரவர்த்தி,மகாராஜன்,விஜி என என் கல்லூரிக்கு அப்பாற்ப்பட்ட அருமையான தோழமையும் சில அறை தோழமையும்,

சந்துரு,சுதாகர்,கோபி,குகா,ராஜு,அன்பு,நாண்டி,கார்த்திக்,பிரேம்,பிரவீன் இன்னும் ஏனைய என் அலுவலக நண்பர்களும் இதிலே அடக்கம்.

இதில் ரவிவர்மா,ராஜகுரு,நிரஞ்சன்,முத்து,மணி போன்ற இன்னொரு நட்பு வட்டமும் இன்றளவும் தொடர்கிறது..என் கல்லூரி தோழிகள் மற்றும் மற்ற நண்பிகள்

ஜெயஸ்ரீ,ரேவதி,மாருதி,சர்மிளா,பிரியா,மேனகா,சரண்யா,சிநேகா,

ஸ்ரீலக்ஷ்மி,அணு.....

இன்னும் ஏனைய என் நலம் விரும்பும் தோழிகளுக்கும்,இதில் பெயர் விடுப்பட்ட நண்பர்கள்,நண்பிகள் ஏனையோர்.மேலும் என் இணைய நண்பர்கள் மற்றும் பதிவுலக நண்பர்களுக்கும்...இப்பதிவு எழுதும் போது எல்லோர் பெயரையும் நினைவுப் படுத்த இயலவில்லை..அதற்காக நண்பர்கள் வருத்தப் பட வேண்டாம்..அனைத்து என் நட்பின் இலக்கணங்களுக்கும் இக்கணத்தில்,இந்த நாளில் பதிவிடுவதில்,நினைவுகூர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அனைத்து நண்பர்களுக்கும் என் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்...

Widget byLabStrike


5 comments:

 1. நண்பர்கள் தின வாழ்த்துகள்... நண்பரே

  ReplyDelete
 2. நண்பர்கள் தின வாழ்த்துகள் தோழரே!

  - ஜெகதீஸ்வரன்

  ReplyDelete
 3. நண்பர்கள் தின வாழ்த்துகள் நண்பா...

  ReplyDelete