Monday, August 23, 2010

நிர்வாணம்-7

நிர்வாணம்-மருத்துவம்



மானுடவியலின் கட்டாயத் தேவைகளில் மருத்துவம் என்பது மதிப்பிட இயலாதது.ஒவ்வோர் மனிதனும் மருத்துவத்தை நம்பியே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலை.மருத்துவம் நம் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்துவிட்ட விசயமாகி விட்டது.

அப்படிப்பட்ட மருத்துவத்திலும் "நிர்வாணம்" என்பது நீடித்து நிற்கிறது.

உடலுறுப்புகளைப் பற்றிய விசயங்களை உள்வாங்கல் தேவையாகிறது.

காரணம்,புற உடலைப் பற்றியும்,அக உடலைப் பற்றியுமான முழுமையான அறிதல் அத்துறைக்கு அவசியம்.

கல்வியில் அவர்களுக்கு,கலந்துவிட்ட விஷயம்.படிக்க வேண்டிய அவசியமும்,பார்த்து அறிய வேண்டியதுமான கட்டாயம்.

உடலை ஆராயும்போது அவர்களுக்கு அது அசிங்கமாய் இல்லை.ஆராய்தலின் அவசியமாகிறது.

ஏனெனில்,அவர்களின் பணி மற்றும் ஆராய்தல்,அவசியமென்பது பொதுமக்களுக்கு முழுதாய் புரிகிறது.ஆகவே புறக்கணிப் பாரில்லை.

மேலும் மருத்துவசிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை,ஆராய்சியல் என பல்துறைக்கும் பயன்படவும்,பாதுகாப்பு பணி சாராம்சத்திற்கான ஆராய்ச்சியல் ஊடகமாகவும் நிர்வாண உடல்,மற்றும் அதுசார்ந்த பாடத்திட்டம் மருத்துவ உலகுக்கு உரித்தாகிறது.

-இப்படி ஓர் கட்டாயம் முன்னிறுத்தப் படுகின்ற போது நிர்வாணத்தின் அவசியம் நமக்கு தெரிகிறது.அத்தியாவாசியம் தெளிகிறது.

தொடரும் அம்மணம்..


Widget byLabStrike


2 comments:

  1. வெகு சுருக்கமாக எழுதிவிட்டீர்கள் மருத்துவத்தின் நிர்வாணத்தை...

    ReplyDelete
  2. உலகறிந்த விடயமானதால் நண்பரே ..

    ReplyDelete