Wednesday, August 18, 2010

நிர்வாணம்-6

நிர்வாணம்-புகைப்படம்

இருக்கின்ற விசயத்தை இயல்பாக,நேர்த்தியாக,தரம் தந்து தருவிப்பதில் பெரும்பங்கு புகைப்படத்திற்குண்டு.புகைப்படம் என்பது தனித்தனி படப் பிரதிகளாக எடுக்கப்படுவதாகும்.

ஓர் புகைப்படத்தின் மூலமாகவே,சம்பந்தப்பட்ட விளம்பரம் அல்லது அதன் தேவையை ஒரே பிரதியில் தெளிவுப்படுத்த இயலும்.

தொடர் காட்சியமைப்புகள் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.இயக்க உருவ அவசியமும் இல்லை.

நிர்வாண அவசியம்:

புகைப்பட தேவைக்கருதி நிர்வாண மாடல்கள் பெரும்பான்மையாக புகைப்படங்களுக்கு பயன்படுத்தப் படுகின்றனர்.மேலும் காண்போரை கவர்ந்திழுக்கவும் கவர்ச்சியை உள்ளடக்கிய கருத்தை முன்வைத்தும் நிர்வாண அவசியம் நிலைபெறுகிறது.

எடுக்கப்படும் முறை:மாடல்கள்,அவர்களின் இயல்புகள் உணர்த்தப் போகும் கருத்து ஆகியவைகளை புகைப்படக்கலைஞன் உள்வாங்கிக்கொண்டு புகைப்படம் எடுக்கிறான்.

நிர்வாண புகைப்படம் எடுக்கின்ற போது மாடல்களின் அழகியல் உணர்வுகளுக்கு சிறிதும் அபத்தமில்லாமல்,நாகரிக உலகின் (fashion ) நயத்திற்கேற்ப்பவும்,கற்பனை உணர்வுகளைக் கலந்து,கலாச்சாரங்களை சீர்குலைக்காமல்,விரசங்களை விளைவிக்காமல்,கலை உணர்வுகளை,அதன் நோக்கோடு வெளிப்படுத்தும் விதத்தில் மாடல்களை அமைத்து கையாளப் படவேண்டும்.பெரும்பாலும் அவ்வாறாகவே,பயன்படுத்தப் பட்டும் வருகின்றன.

வெளிப்படுத்தப் படும் விசயங்களின் வேகம்.

இளமையை,கவர்ச்சியாக அழகியலோடு அறிமுகம் செய்தல்.

உணர்ச்சிகளின் ஒருமித்த நோக்கம்.

காட்சியமைப்பில் கண்காணும் முறை.

நாகரிகமும் வித்தியாசமும் கலந்து நோக்கத்தை முன்னிறுத்தல்.

-இவற்றில் ஏதேனும் ஒன்றையோ,அல்லது ஒருமித்த கருத்துகளையோ கூட கலைஞன் காண்பிக்க செய்கின்றான்.

ஒழுங்கமைத்தல்(composition ):பல புகைப்படங்கள்,நிர்வாணத்தை வெளிப்படுத்துவதில்,உருவமைத்த முறைகளில் வித்தியாசப் படுகின்றன.

நின்று,நன்கு பார்த்து சிந்தித்தாலொழிய அது நிர்வாணம் என்பதே பல சமயங்களில் யாருக்கும் தெரிவதில்லை.ஏதோ ஓர் உருவ அமைப்பு உள்ளதாக மட்டுமே உணர இயல்கிறது.

தத்தம் கற்பனை களுக்கேற்ப வித்தியாசமாக புகைப்படம் எடுக்கிறார்கள்.மார்பகங்கள் மலைகலாகின்றன.உடல் நிலப் பரப்பாகிறது.சமவெளிகளாகவும் காட்சி தருகிறது.மார்பெலும்பு புடைப்புகள்,பாலை மணல் வரிகளாகவும் வர்ணிக்க வைக்கின்றன.சொல்லப்போனால் "எழுதப்படாதக் கவிதை" என்றே வர்ணிக்கலாம்.அத்தனை அம்சமாய் அழகியலை தன்னுள் அடக்கி வைத்திருக்கின்றன நிர்வாணப் புகைப்படங்கள்.

நிர்வாணம் வளரும்..


Widget byLabStrike


6 comments:

 1. உதரனத்திற்க்கு உபயோகப்படுத்தபட்டிருக்கும் புகைப்படங்கள் அருமை.

  ReplyDelete
 2. புகைப்படக் கலைஞர்களுக்கு அந்த பாராட்டுகள் உரித்தாகும்..நன்றி நண்பரே ..

  ReplyDelete
 3. அன்பின் நண்பா...
  வணக்கம்.
  உங்கள் வலைப்பூ குறித்த பகிர்வை எனது இன்றைய வலைச்சரம் பதிவில் தொடுத்து இருக்கிறேன்.

  நீங்கள் வாசிக்க வலைச்சரம்(http://blogintamil.blogspot.com/2010/08/blog-post_18.html) செல்லவும்.

  நன்றி.
  நட்புடன்
  சே.குமார்

  ReplyDelete
 4. “எழுதப்படாதக் கவிதை”

  மிகவும் அருமையாக இருக்கிறது நண்பரே!.

  நிர்வாணம் ஆன்மீகத்திலும் பெரும் பங்கு வகிக்கிறது. எல்லாம் துறந்தவன் என்று சொல்ல உடையையும் துறக்க வேண்டியதாகிறது.

  தொ

  ரு
  ங்

  ள்

  - ஜெகசதீஸ்வரன்.
  http://sagotharan.wordpress.com

  ReplyDelete
 5. உங்களைப் போன்றோரின் ஊக்கம் தான் என் ஆக்கத்திற்கு பலம் நண்பா..நன்றி

  ReplyDelete
 6. எமக்கும் உம் இதயத்தில் ஓர் இடம் கொடுத்தாய்..நன்றி நண்பா..

  ReplyDelete