Friday, July 23, 2010

வேலைக்கார"நாய்"



படுக்க பாயில்லா

ஏழை வீடு.

சிவப்புக் கம்பளத்தில்

செல்வந்தன் நாய்.

---------------------------------------

அதிர்ஷ்டமீன் விலை

ஐந்து லட்சம்.

இரண்டு வருடங்களாக

ஏற்றிக் கொடுக்கப்படாத

இரண்டாயிரம் சம்பளத்தில்

மீன் காப்பாளன்.

---------------------------------------

இன்னும் அமர்ந்து

பார்த்ததில்லை

மகிழ்வுந்து இருக்கையில்

கார் கழுவுபவன்.

---------------------------------------

நாய்க்குப் பெயர்

"கிங்"

உதவியாளனுக்குப் பெயர்

வேலைக்கார"நாய்".

---------------------------------------

நடுவீட்டில் சுச்சூ...

போகிறதாம்

பப்பி.

திறந்த வெளியில்

வேலைக்காரனுக்கு

மீந்த சாப்பாடு.

---------------------------------------

விலங்குகளைக் காக்க

blue cross.

cross-ல் அறையப்படாமல்

தண்டிக்கப் படும்

மனிதனைக் காக்க???

Widget byLabStrike


6 comments: