Sunday, July 18, 2010

நான் இப்போதே இறந்திட வேண்டும்.



நான் இப்போதே

இறந்திட வேண்டும்.

உம் உதட்டில் ஒட்டி

உயிர்வாழும் உதட்டு சாயமாகும்

இன்னொரு பிறவி வேண்டி..

---------------------------------------------

நான் இப்போதே

பிறந்திட வேண்டும்.

உன் காலினில்

தவழ்கின்ற

கால் கொலுசாகும்

புதியதோர் வாழ்வினை தேடி.

---------------------------------------------

நான் இப்போதே

இறந்திட வேண்டும்.

உன் எச்சில் பட்ட

சாக்லேட் கவராகும்

அடுத்தப் பிறவி வேண்டி.

---------------------------------------------

நான் இப்போதே

பிறந்திட வேண்டும்.

உம் பாதம் பற்றி

வருவதற்கு உம் காலில்

செருப்பாகும்

புதியதோர் வாழ்வினை தேடி.

---------------------------------------------

நான் இப்போதே

இறந்திட வேண்டும்.

நீ என்னைவிட

அதிகமாய் நேசிக்கும்

தங்க ஆபரணமாகும்

மற்றுமொரு பிறவி வேண்டி.

---------------------------------------------

நான் இப்போதே

பிறந்திட வேண்டும்.

உன் மலர்கின்ற

முகத்தினில்

மஞ்சளாகும்

புதியதோர் வாழ்வினை தேடி.

---------------------------------------------

நான் இப்போதே

இறந்திட வேண்டும்.

உன் காதலனாகவே

இறக்கும் போதும்

இருந்திட வேண்டி.

---------------------------------------------

நான் இப்போதே

பிறந்திட வேண்டும்.

உன் காதலனாகவே

மறுப் பிறப்பும்

தொடரும்

புதியதோர் வாழ்வினை தேடி.

Widget byLabStrike


4 comments:

  1. நல்ல காதல் நல்ல கவிதை...

    ReplyDelete
  2. nanri maravatha ulakinil
    naanammikka poomiyil
    urimakalaikkadanthu
    uravukalaiththuranthu
    ithayapparappinil
    inpamakakkudikondavale
    un unnatha uravu
    ujir thudikkinrathu
    urimayudan oodiva
    uththamanaj nan vaala........!!!!!!

    ReplyDelete