Friday, July 16, 2010

செய்தித்தாள்


சரசரக்கும் உன்

ஓசையில்

காலை விடிகிறது..

------------------------------

நீ வந்து

குதிப்பதாலே பல

வாசல் திறக்கிறது.

------------------------------

பொழுது விடிவதும்

மடிவதும் உம்

மடியில்..

------------------------------

பலர் எழுவதும்

விழுவதும்

உன்னடியில்.

------------------------------

முதல்நாள்

மடித்து

கொடுக்கப் படுவாய்.

------------------------------

மறுநாள்

கிழித்து

கெடுக்கப் படுவாய்.

------------------------------

ஓர் நாள் பிறந்து

மறுநாளே

இறந்தும் போகிறாய்.

------------------------------

எது எப்படியோ

வாழும் வரை

வரலாறு நீ.

------------------------------

வரலாறுகளை

உருவாக்குவதும்

நீ!

------------------------------

ஓர் நாள் உலகம்.

ஒவ்வொரு நாளும்

நீதான் உலகம்.

Widget byLabStrike


10 comments: