Thursday, July 15, 2010

ரயில் சிநேக(ா)ம் - மேற்கொண்டு படிக்காதீங்க..


ந்தப் பதிவு அவளுக்காக மட்டுமே எழுதப்படுகிறது..சத்தியமா ,நீங்க எதிர்ப்பாக்குற மாதிரி, எந்த இன்ட்ரெஸ்ட்டிங் மேட்டரும் இல்ல..மேற்கொண்டு படிக்காதீங்க..(அப்புறம் என்னடா இவ்ளோ மொக்கையான மேட்டர்னு பீல் பண்ணப்படாது... சொல்லிப் புட்டேன்.)ஒரு நாளாவது,என்னைப் பற்றியோர் பதிவெழுது..உன் படைப்பாளியில் எனக்குமோர் பக்கம் கொடு,என்று நிபந்தனை மேல் நிபந்தனை போட்டு,எழுதாத என் மெத்தனம் கண்டு,திட்டி தீர்த்து,தீர்ந்து விட்டது அவள் குரல்.

என் பதிவுகளை,அடிக்கடி பார்வையிடும், அவள் பார்வை இப்போ கொஞ்சம் நாட்களாய் என் படைப்பாளி மேல் படுவதில்லை....என்பதை தொலைப்பேசி வழியாகவே தொலைதூரச் செய்தியாய் அறிவித்தாள் அவள்..அறிவிப்பு இதுதான்..என்னைப் பற்றி ,எப்போ ஓர் பதிவு எழுதுகிறாயோ,அன்று உன் படைப்பைப் பார்ப்பேன்..அதுவரை என் பார்க்கா விரதம் நீளும்.

இணைய வழியாகத்தான்,எனக்கு இணைப்பிரியாத் தோழியானவள் அவள்..எங்களுக்குள் எத்தனையோ முறை,அலைப்பேசி உரையாடல்கள் அகமகிழ நிகழ்ந்திருக்கின்றன..ஆனால் சந்தித்ததில்லை..அந்த ரயில் பயணம் தான் முதன் முறையாய் எங்களை சந்திக்க வைக்கிறது...அந்த ரயிலில்,அவளுக்கு அருகாமையில்,அவள் தோழிக்காய் பதிவு செய்யப்பட்ட இருக்கை அது..அவள் தோழி அன்று ஏதோ அலுவல் காரணமாக அவளோடு பயணிக்காதிருக்கவே..எனக்கு வருகிறது அழைப்பு..ஊருக்குப் போகிறேன்..ஓர் பயணச்சீட்டு அதிகமாய் இருக்கிறது.என்னோடு பயணம் வருகிறாயா??

அவள் ஊருக்கு பயணம் போகும், இடை வழியில் என் ஊர்..நானும் ஊருக்கு போகும் ஆயத்தத்தில் இருக்கவே..ஹ்ம்ம் சொல்லி முடிக்கிறேன்.(பொண்ணு கூப்புடுதே வரலன்னு சொல்வேனா..ஹீ..ஹீ...பஸ்ஸில் செல்ல ஆயத்தமான என் பயணம்,அவள் புண்ணியத்தில் ரயிலில்.. )பெண் பெயரில் பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டு ஆயிற்றே !!எப்படி போக முடியும்..ரயில் நிலையம் சென்று யோசிக்கிறேன் நான்..அவளிடம் இதுப் பற்றி வினவுகிறேன்..

கவலை வேண்டாம் மானுடா!!நானிருக்கிறேன்..என் தோழி பெயர் முத்தமிழ்..TTR கேட்டால் உம் பெயர் முத்தமிழ் என்று சொல்.பெண் என்று குறிப்பிட்டிருப்பது அறியாமல்  செய்துவிட்ட தவறு என நான் சொல்லி முடிக்கிறேன் என்கிறாள்..

நல்லவேளை TTR ஒன்றும் கேட்கவில்லை..இருந்தும் எப்போ TTRஇறக்கி விடப் போறாரோ!!என்று எம்முள் பயம்..பயம் கலந்த இரவுப் பயணம், பயமறியாத அவளோடு,பயணிக்க ஆரம்பிக்கிறது...மொக்கைபோட்டுக் கொண்டு ..

-இந்தப் பதிவுக்கு நான் தலைப்பிடவே(ரயில் சிநேக(ா)ம்) தயாரானதோ உம் பெயரும்,நம் சந்திப்பும்..!!.சிநேகா!!

தோழிக்கான குறிப்பு:சிநேகா உனக்காக ஓர் பதிவு ..(படித்துவிட்டு யார் காறித் துப்பினாலும் பரவா இல்லைன்னு,கவலைப் படாம எழுதிப்புட்டேன்..) இனியாவது,என் படைப்பாளியை சற்று கவனி!!

Widget byLabStrike


12 comments:

 1. காரி துப்ர மாதிரி எதுவும் இல்லை நண்பா, அன்பர்க்கு என் வாழ்த்துகள் ஸ்னேஹா சீக்கிரம் சிநேகமாய் உன் பக்கம் பார்வை திருப்புவாள்.

  ReplyDelete
 2. மனசுக்குள்ள இத்தனை ஏக்கம் இருக்கா உணக்கு? இன்னொரு ஒரு தலை ராகம் படம் ஆக்கலாம்
  போல இந்த கதை வெச்சு ?

  ReplyDelete
 3. திருமணம் ஆச்சுப்பா அவளுக்கு..காதலி அல்ல தோழி அவள்..
  குடும்பத்துல குழப்பத்த உண்டு பண்ணிடப் போறீங்க!!
  (கலகக்காரறு,கலகம் உண்டாக்கப் பாக்குறாரு... பிரச்சினை வந்தா நான் பொறுப்பில்ல ஸ்னேஹா....எல்லாம் நம்ம நண்பர்கள் உபயம் தான்..ஹி.. ஹி)

  ReplyDelete
 4. ஏன் நாங்களும் நீண்ட நாள் வாசகி தான் எங்கள பத்தி எல்லாம் எழுத மாடீன்களா

  ReplyDelete
 5. உமக்கான பக்கம் ஒன்றா....இரண்டா...!!!

  ReplyDelete
 6. Kalakkunga.. Oviyamum nandraaga ullathu.

  ReplyDelete
 7. இவ்வளவு நடப்பான சிநேகம் (சினேகா) உங்களுக்கு கிடைத்திருக்கிறார். ரயிலில் சிநேகம் வழியில் நடப்பிற்கு இலக்கணம்.

  ReplyDelete
 8. i wishes to continue ur friendship

  ReplyDelete