Monday, July 12, 2010

ஓ போடு...


அப்போது நான் சென்னை ஓவியக் கல்லூரியில் மாணவன்..விடுதி வாழ்க்கை..மூன்று நேரங்களில் இரண்டோ அல்லது ஒரு நேரமோ தான் ஒழுங்கான உணவு...எனக்கும்,நண்பர்களுக்கும்...பட்டினி பல நேரங்களில் எங்களோடு பட்டினி கிடந்திருக்கிறது..ஆனால் அது தான் வாடிப்போயிருந்ததே ஒழிய ,பட்டினி ஒரு போதும் எங்களை வாட்டியதில்லை..அப்பப்போ..ஊருக்கு போய் வரும்போது அப்பா அம்மா கொடுத்தனுப்பும் பணம்,நண்பர்களோடு சேர்ந்து, எங்களுக்கும் ஒரு நாள் கூத்தில் உலர்ந்து போகும்..அந்த ஒரு நாள் அனைவர்க்கும் ராஜ..ராஜா வாழ்க்கை தான்..பணம் இருக்கும் போது படோபமான வாழ்க்கை..இல்லாத போது எதிர்மறை வாழ்க்கை.பல நேர செலவுகளை வெளியிலிருந்து கிடைக்கும் ஏதேனும் வேலைகள் பூர்த்தி செய்யும்.அப்படித்தான் அப்போவும்..

அது ஒரு தேர்தல் களம்..தேர்தல் காலம்..வாக்காளர் அறிவிப்பு,சுவர் விளம்பரங்கள்,சுவரொட்டிகள்,ஒட்டு சேகரிப்பு என ஊரே அல்லோகப் பட்டு கிடக்கிறது..எங்களுக்கும் தேர்தல் வந்தால் அப்படியோர் தீராத சந்தோஷம் காத்திருக்கும்..பணம் பாக்கெட்டுகளை நிரப்பும்..சுவர் விளம்பரங்களை குத்தகைக்கு எடுத்து விடுவோம்..ஆளுக்கு ஒரு கலரைக் கலக்க வேண்டியது தான்..ஒருத்தன் பேர் எழுதுறது..ஒருவன் சின்னங்களை வரைவது என வேலைகள் விறுவிறுப்பாகும்..

அன்று மீஞ்சூரில் எங்கள் களப்பணி ஆரம்பமாகி இருக்கிறது...கலரைக் கலக்கி விட்டோம்..வேலு சுவர் விளம்பரம் எழுதுவதில் எக்ஸ்பெர்ட்..நான் சின்னங்களை கிறுக்குவது..தனபாலுக்கு இதரப் பணிகள்...விளம்பரங்களை எழுத ஆரம்பித்து விட்டார் நம்ம எக்ஸ்பெர்ட்.. வாக்காளர் பெயரெழுதி,சின்னம் வரைந்து,இந்த சின்னத்தில் ஓட்டு போடுங்க என எழுத வேண்டும்..ஓட்டு போடுங்க என்பதற்கு...ஒாட்டு...என ஒ போட்டு கால் வாங்கி விட்டார் நண்பர்.(நான் என் சின்ன வயசுல கௌதமி ங்கிறதுக்கு கெ ள தமி ன்னு படிச்ச ஞாபகம்).

ஏய் என்னடா தமிழா இப்படி பண்ணிட்டியேன்னு நான் கேட்க..வேலுவும்,தனபாலும் வாக்குவாதம் செய்கிறார்கள்..க,கா,ம,மா,ர,ரா னு நெடில் ஓசை எல்லாம் கால் வாங்கி வரும் போது ஓ மட்டும் எப்படி தனியா வரும்னு..!!!அப்போ அந்த வழியாப் போன,வழிப்போக்கன் ஒருத்தன் பாத்து ,என்னப்பா காலேஜ் வரைக்கும் படிச்சீங்க.. என்று கலாய்க்க..(படிக்கிற காலேஜ் இல்ல..வரையுற காலேஜ் அது அவருக்கு தெரியாது..ஹி..ஹீ)..

அதுல இருந்து நம்ம பசங்களுக்கு பேரே ஓ போடு தான்..

Widget byLabStrike


5 comments:

  1. மொத்ததில நமக்கு எவனும் மொழிய சரியா சொல்லித்தரல.... எனக்கும் இந்த குறில் நெடில், சந்திப் பிழை பிரச்சனை நிறையவே இருக்கு நண்பரே...

    ReplyDelete