Friday, July 9, 2010

அலைபேசி குறுஞ்செய்தியும்,அலெக்சாண்டர் க்ரஹாம்பெல் காதலியும்

காலையில் குட்மார்னிங் சொல்லி, தான் வந்தக் கடமையை முடித்துக் கொண்ட,அந்தக் குறுஞ்செய்தி,குட்மார்னிங் சொன்னதோடு சேர்த்து ஓர் சுவைமிகு கருத்தையும் சுமந்து வந்திருந்தது..

அடடே... இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!தெரியாமலே உச்சரித்திறிக்கிறோம்  அவள் பெயரை..நான் மட்டுமல்ல உலகமே அடுத்தவன் காதலி பெயரை, நொடிக்கொரு முறை உச்சரித்திருக் கிறதே..சாதித்துவிட்டான்..சாதித்தவன் அவனாக இருந்தாலும் சாதனை நாயகியாய் அவன் காதலி அல்லவே ஆகிவிட்டாள்..

ஓ...அதனால்தானோ என்னவோ...இன்றும் அவன் கண்டுபிடிப்பே காதலையும்,உறவையும் வாழ்வித்து வருகிறது.காதல் என்றால் இதுதானோ!!..இந்த உலகம் இருக்கும் வரை அவள் பெயர் வாழும்!!தாஜ்மஹால் என்னப் பெரிது..இதுவல்லவே அதை விடப் பெரிது!!இப்படி தான் நினைத்து விட்டேன் அந்தக் குறுஞ்செய்தியைப் படித்தவுடன்.அப்படியோர் செய்தி அது..



செய்தி இதுதான்..தொலைப்பேசியை கண்டு பிடித்தவர் அலெக்சாண்டர் க்ரஹாம்பெல் என்பது அனைவரும் அறிந்தது..ஆனால் தொலைப்பேசியில் நாம் பேச ஆரம்பிக்கும் போது சொல்லும் ஹலோ என்பது என்ன என்று உங்களுக்குதெரியுமா??ஹலோ என்பது அலெக்சாண்டர் க்ரஹாம்பெல்லின் காதலி பெயர்..அவர் தொலைப்பேசியைக் கண்டுப் பிடித்ததின் நினைவாக,பேச ஆரம்பிக்கும் போது ஹலோ என்று அவர் காதலியின் பெயர் பயன்படுத்தப்பட்டது..உங்கள் பெயரை நீங்கள் மறந்தாலும்,ஹலோ என்ற, அவர் காதலிப் பெயரை மறக்க முடியுமா?என்று கேட்டு முடிகிறது அந்தக் குறுஞ்செய்தி.

ஆச்சர்யமுற்ற நான், எவ்வளவு பெரிய விஷயம்!இவ்வளவு நாள் அந்தக் காதலின் பெருமை அறியாமலே,ஹலோவை பயன்படுத்தி இருக்கிறோமே..அதைப் பற்றி நண்பர்களிடம் சொல்ல வேண்டும்.அதற்கு முன் அந்த செய்தி உண்மையா என அறிந்து கொண்டு சொல்வோம் என்றெண்ணி,கூகுளில் அலசிய போது விஷயம் வேறு மாதிரி தெரிய வந்தது ..ஹலோ என்ற வார்த்தையை தாமஸ் எடிசன் (Thomas Edison) என்பவரே அறிமுகம் செய்ததாகவும்,அலெக்சாண்டர் க்ரஹாம்பெல் கண்டுபிடித்தபோது அஹாய் (Ahoy) என்ற வார்த்தையையே அவர் அறிமுகப்படுத்தியதாகவும் தெரிய வந்தது...அப்போ அந்தக் காதலிக் கதை..??????????அது வெறும் டுபாகூர்...

நல்லவேளை,இதை பார்க்காமலோ,படிக்காமலோ யாரிடமாவது அதைப் பற்றி நான் பேசி இருந்தால்,அவருக்கு விஷயம் தெரிந்திருக்கும் பட்சத்தில், ஒன்று நான் அசிங்கப் பட்டிருக்க வேண்டும்.இல்லை அவருக்கு அது பற்றி தெரியாதப் பட்சத்தில் தவறான கருத்தை அவருக்கு நான் போதித்திருக்க வேண்டும்...இப்படித்தான் பல செய்திகள் அலைபேசியில்,குறுஞ்செய்தியாய் தவறானத் தகவல்களை சுமந்துக் கொண்டு நம்மை வந்தடைகின்றன.அப்படி வரும் செய்திகளின் உண்மைநிலை தெரியாமல் நாமும் மற்றவர்களுக்கு அனுப்பி மகிழ்கிறோம் .. அப்படி அனுப்பப் படும் செய்திகள் தவறான கருத்தோடு மற்றவர்களுக்கு சென்றடைகின்றன...எனவே நமக்கு வரும் குறுஞ்செய்திகள் உண்மை என்று தெரியும் பட்சத்தில் அதை மற்றவர்களுக்கு அனுப்புங்கள்..அதை பற்றி தெரிந்துக் கொண்டு மற்றவர்களிடம் பேசுங்கள்..இல்லையேல்....தெரியாமல் நாம் அனுப்பும் செய்திகளும்,தகவல்களும் தவறானக் கருத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துக் கொண்டுபோய் சேர்த்துவிடும்..குறுஞ்செய்தி அனுப்பும் முன் அதை மனதில் கொண்டு செயல்படுவது நலம்..

Widget byLabStrike


11 comments:

  1. கண்டிப்பாக யோசிக்க வேண்டிய ஒன்று...

    ReplyDelete
  2. நல்ல செய்தி, சுவாரஸ்யமான செய்தியும் கூட...

    ReplyDelete
  3. Very good naan solli kodutha madhiriyea eazhudhita

    ReplyDelete
  4. நல்லா கெளப்புறாங்கய்யா பீதிய...

    ReplyDelete
  5. inimey unga kadhali peyari sollunga phone pannum pozhuthu

    ReplyDelete
  6. அதிலும் ஒரு பிரச்சினை இருக்கிறது..எந்தக் காதலி பெயரை சொல்வதென்று!!!ஹா..ஹா..

    ReplyDelete
  7. ஹலோ! அசத்துறீங்க அண்ணா.....

    ReplyDelete