Thursday, July 8, 2010

என் பட்டியலில் முதலிடம் பிடித்தப் பாடல்

இசைக்கு மயங்காத உள்ளங்களும் உண்டோ!!சந்தோசமா போடு குத்துப்பாட்டு..சோகமா போடு ஒரு சோக கீதம்..பார்ட்டியா போட்ரா பார்ட்டி சாங்கு..என எங்கெங்கு காணினும்,எதை நோக்கினும்,என்ன செய்யினும் இசையின் தாக்கம் நமக்குள்ளே ஊடுருவாத இடமில்லை..நம் தாயின் கர்ப்பபையில்,கருவாய் நாம் வளர்கிற போதே இசை ரசனையும் நம்மோடுசேர்ந்து வளர ஆரம்பிக்கிறது..அறிவியல் பூர்வமாகவும் அது மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.. அப்படிப் பார்க்கும் போது இசையே நமக்கு முதல் நண்பனாய் உருவெடுக்கிறது..கருவில் உருவான உறவு ,கடைசி வரை நம்மை விட்டுப் பிரியாத உயிர்த் தோழனாகவும் உடன் தொடர்கிறது.. நம்மைத் தொடரும் ராகங்களோடு உறவாடும் பாடல்களில் எல்லாமே நம்மை ரசிக்க வைத்து விடுவதில்லை..ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான இசை,ஒவ்வொரு இசைக்கலைஞர்கள் பிடித்துப் போயிருக்கும்.. எனக்கும், இளையராஜாவின் இசையில் ஓர் தனி லயிப்பு உண்டு..அவ்வப்போது ரஹ்மான் இசையை ரசிப்பது உண்டு..

ஆனால் எப்போ கேட்டேன்?எப்படி பிடித்தது??என்றே தெரியாமல் அந்தப் பாடலும்,இசையும் மட்டும் என்னுள்ளே ,அப்படி ஓர் தவிர்க்க முடியாத,தாக்கத்தை, தனக்கான முதல் இடத்தை தக்க வைத்திருக்கிறது.சமீபத்தில் தான் அந்தப் பாடலுக்கான காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு,எனக்கு கிடைத்தது..பாடலில் மட்டுமல்ல..ஆடலிலும் அப்படியோர் நளினம்.எனக்கு விபரம் தெரிந்தக் காலத்திலிருந்தும்,இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து கேட்டாலும் மாலையிட்ட மங்கை திரைப்படத்தில் வரும் செந்தமிழ் தென்மொழியாள் என் மனதில் பிடித்த முதலிடத்தை வேறு எந்தப் பாடலாலும் மாற்றிட இயலாது...அப்படி அந்தப் பாடலின் மீது ஓர் தீராதக் காதல்எனக்கு.தமிழ் எமக்கு தாயானதால், சேயிடம் காதல் கொண்டாளோ செந்தமிழ் தேன்மொழி!!







ங்கள் எண்ணத்தில்,முதலிடத்தில் இருக்கும் பாடலையும் பின்னூட்டத்தில் மறக்காமல் குறிப்பிடுங்கள்..ரசனையுள்ள  இசையாடல்களை அறிய,அது வாய்ப்பாய் அமையும்..

Widget byLabStrike


16 comments:

  1. அருமையான பாடல்..எப்போது கேட்டாலும் ரசிக்க கூடிய... பாடல்

    ReplyDelete
  2. மிக அருமையான பாடல். எனக்கு மிக பிடித்த பாடல் வரிசையில் இந்த பாடலும் உண்டு.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. ஆமாம் நண்பரே...நயமான வரிகள்..நளினமான ஆடல் அமைப்பு

    ReplyDelete
  4. உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  5. எந்த கூட்டத்திலும் இந்த பாடலை கத்தினால் ( நன்றாக பாடவேண்டியதில்லை) போதும்.
    கிளாப்ஸ் அள்ளும்.

    ReplyDelete
  6. அப்படியோர் நவரசம் அப்பாடலில் இருக்கிறது நண்பரே..

    ReplyDelete
  7. நலல் பாடல், நல்ல ரசனை....

    ReplyDelete
  8. ரொம்ப நாள் அச்சு நான்பா உங்க வலை பக்கம் வந்து . இன்று தான் நேரம் கிடைத்தது . எந்த பாட்டுக்கு முதலிடம் என்று என்னால் என்றுமே சொல்ல முடியாது அந்த வரிசை நீளும் ஆனால் ரோஜா படத்திலிருந்து காதல் ரோஜாவே பாடல் மிக பிடித்தது

    ReplyDelete
  9. நீண்ட நாள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி நண்பரே..எமக்கும் கூட மிகவும் பிடித்தப் பாடல்..யாராக இருந்தாலும் காதலும்,ரோஜாவும் பிடிக்காமல் போகுமா!!!

    ReplyDelete
  10. nice comments for u r placing a song in mind. my song is theivam thantha vedu from aval oru thodarkadhai.

    ReplyDelete
  11. அருமையானப் பாடல் நண்பரே..

    ReplyDelete
  12. """ Nadhiyil Vilayadi..Kodiyil thalai seevi nadantha ilandenralae...""

    ReplyDelete
  13. நயமான வரிகள்..வருடும் பாடல்..

    ReplyDelete