Wednesday, July 7, 2010

உன்னாலே விடிகிறது எனக்கு



சாமிப் படம் பார்த்து
விழிக்க சொல்கிறாள்
என் தாய்.
நான் விழித்து விட்டேன்
உன் முகத்தில்.
------------------------------------
கண்ணாடிப் பார்த்து
எழுவது என் வழக்கம்.
என் முகத்தில்
நானே விழிக்கிறேன்
என்னில் நீ
இருப்பதனால்..
------------------------------------
உறக்கம் களைந்தும்
கண்மூடிக் கிடக்கிறேன்.
உன் அழைப்பு
வந்து
எம்மை எழுபட்டுமே
என்று!!!
------------------------------------
நீ எழுப்பிவிடாத
நாளெனக்கு
இருண்டேக் கிடக்கிறது.
உன் குரல் கேட்டு
எழும் நாளோ
இருள்புக மறுக்கிறது.
------------------------------------
நீ இருக்கும் போது
ஆறு மாதம்
பகலாகி இருந்ததாமே!
ஏனடி விட்டுவிட்டு
வந்தாய் கிரீன்லாந்தை.
ஆறு மாதமாய்
இருண்டேக் கிடக்கிறதாம்..


Widget byLabStrike


No comments:

Post a Comment