Tuesday, July 6, 2010

சென்னை விமான நிலையத்தின் மேல் பறந்த அந்நிய விமானம்



அந்த செய்தியைக் கேள்விப்பட்டபோது பதற்றம் வரவில்லை..காமெடி யாகத்தான் இருந்தது.பெரிய நாடு..மிகப்பெரிய ஜனநாயகம்..வளர்ச்சிப்பாதையில் உலகின் பார்வையை திரும்பிப் பார்க்க வைக்கும் அசுர வளர்ச்சி..உலக வல்லரசுகளோடு போட்டிப் போடும் வல்லமை.இவையெல்லாம் நாம் செய்தித்தாள்களிலும், நாம் பிறந்த நாடு என்பதற்காய், நாமும், இந்தியாவைப் பற்றிப் பேசும் பெருமை மிகு வசனங்கள்..
ஆனால்...யதார்த்தைப் பார்த்தால்..ஏ காமெடி பண்ணாதீங்கப்பா..என்றுதான் சொல்லத் தோன்றும்..அப்படிப்பட்ட செய்தி அது..

ஓவர் பில்ட் அப் பண்ணாத...மேட்டருக்கு வான்னு தானே சொல்ல வர்றீங்க..இதோ வந்துட்டேன்..
சென்னை விமான நிலையத்துல,விமானங்களின் நடவடிக்கையை கண்காணிக்கும் ராடார் அந்தக் காலத்துல வச்சதாம்..அதுக்கு ரொம்ப வயசானதால,தன் பார்வையை இழந்திருக்காம்.விமான நிலையத்துக்கு மேல ஒரு காக்காப் பறந்தாக்கூட ஏதோ விமானம் பறக்குதுன்னு ராடார் செய்தி அறிவிக்கிதாம்..அதிகாரிகள்  அலறி அடிச்சுகிட்டு...எந்த அறிவிப்புமில்லாம விமானங்கள் வருதா...இல்ல,எதிரி விமானங்கள் எதாவது ஊடுருவி வந்துடுச்சோன்னு  பயப் படுறாங்கலாம்.அப்புறம் பார்த்தா காக்காப் பறக்குது..என்ன கொடுமை சரவணன் னு சொல்ல தோனுதுல்ல!!
ஹீ..ஹீ..இப்ப சொல்லுங்க நாம வல்லரசுகளோட போட்டிப் போடுறமா!!!

Widget byLabStrike


4 comments:

  1. ஆனா இலங்கைக்கு கொடுத்த ராடார் மட்டும் வேலை செய்யுதே ?

    ReplyDelete
  2. ஆமாம் நண்பரே..தமிழனுக்கு எதிராகத்தான் வேலை செய்கிறது..

    ReplyDelete
  3. நாம் நாட்டுல காகா குருவி கண்டு ஆரிய தான் ராடார் எல்லாம் பயன்பாடுத்றோம்.

    ReplyDelete
  4. சரிதான் நண்பரே ..ஹா..ஹா

    ReplyDelete