Monday, July 26, 2010

நிர்வாணம்-3

நிர்வாணம்-சிற்பம்

Goddess Parvati - 12th century - Sarasvati Mahal Museum, Thanjavur

பண்டைய காலந்தொட்டே "நிர்வாணம்" சிற்பங்களில் நீங்கா இடம்பெற்று வந்துள்ளது.இதற்கு ஆதாரங்கள் தான் பழைய காலகோயில் சிற்பங்கள்.

சிற்பங்களில் நிர்வாண உருவங்கள்,உடலமைப்பியலிலும் சரி,அங்க இலக்கணங்களிலும் சரி,மிகை மிஞ்சியதாக,அதாவது (மார்புகள்,பின்தசைகள் போன்றவை)இயல்பு மீறிய உருவ அமைப்புடனையே தென்ப்படுகிறது. இது காண்போருக்கு கூட வாழ்வில் இருப்பதை விட அதிக்கப்படியான ஓர் வடிவமைப்பை படைத்து விட்டதாய் என்ன தோன்றும்.அதிகப்படியான விசயமாக அமைத்துவிட்டார்களோ,என்ற சந்தேகத்தையும் முன்னிறுத்தும்.

ஆனால் அது அமைக்கப்பட்ட நோக்கமோ,காண்போரை கவர்ந்திழுக்கவும்,அழகுக்கு மேலும் அணி சேர்க்கும் நோக்குடனும்,சிற்பங்களுக்கான ஓர் சீர்முறையாகக்கூட காணப்படுகிறது.

அதற்காக எதார்த்த நிலை சிற்பங்களே இல்லையா?? எனக்கூட கேள்விகள் தோன்றும்.ஏன் இல்லை..மைக்கேல் ஆஞ்சலோ வின் சிற்ப்பங்கள் அனைத்துமே எதார்தத்துடனும் சீரிய வேலைப்பாட்டுடனும்,அழகியலையும்,உணர்வுகளையுமே முன்னிறுத்தி நிற்கின்றன.எதார்த்தமான உடலமைப்பு,மாற்றம் பெறாத ,சீரிய சிற்ப முறையை முதலில் கொண்டு வந்த பெருமைக்கூட அவரையே சாரும்.

david sculpture- michelangelo

இன்றைய நிலையில் நவீன சிற்பங்களில் கூட அவரவர் எண்ணங்களுக் கேற்ப சிற்பங்கள் உயிர் பெறுகின்றன.பண்டைய கால சிற்பங்களில் நிர்வாணம் வாழ்வின் சாராம்சமான "தாம்பத்யம்"பற்றி விளக்கவும்,கடவுளின் கலை படைப்பியல்புகளைப் பற்றி விளக்கவும்,ஓர் ஆதாரமான நிலையைக் குறிப்பதாக அமைந்து வந்துள்ளது,என்பதை நாம் நடைமுறை வாயிலாகவும் அறிய இயலும்.

உதாரணமாக,முந்தைய தலைமுறையினர் மணமான புதுதம்பதியனரை "கோவில்குளம்"சென்றுவாருங்கள் என சொல்லி கேள்விப்படிருப்போம்.இன்றும் மணமானவுடன் கோவில் செல்வது நடைமுறையில் உள்ளது. "கோவில்குளம்"சென்றுவாருங்கள் என்பது,புதுமணத்தம்பதியின் அமைதிக்காகவும்,கடவுளின் அருளாட்சிக்காகவும் என்றே நம்பப்படுகிறது.ஆனால் அதன் உட்க்கருத்து அது இல்லை.

அன்றைய காலக்கட்டத்தில் தாம்பத்யம் பற்றியும்,களவியல் முறைகள் பற்றியும்,உடலுறவு மற்றும் வாழ்வின் சாராம்ச முறைகள் பற்றி நேரடியாக,இளையத் தலைமுறைக்கு எடுத்தியம்ப இயலாததொரு சூழல் இருந்தது.

ஆகவே அதனை மறைமுகமாக (கோயில்குளம்) விளக்கும் விதமாகவே கோயில்களில் நிர்வாண நிலையில்,கலவியில் ஈடுபடுதல்,உடலுறவின் பல்வேறு நிலைகளைக் கொண்ட சிற்பங்கள் உருவாக்கப் படுகின்றன.

குக்கிராம கோயில்கள்,தேர்கள் போன்றவற்றில் கூட இவ்வகை சிற்ப வேலைப்பாடுகளை காணலாம்.மேற்கூறிய சிற்பநிலைகளை உள்ளடக்கி புகழ்பெற்ற கோயில்களும் உள்ளன.

எ.கா .கஜுராஹோ,கோனார்க்

khajuraho sculpture

இதனையெல்லாம் யோசித்து பார்க்கின்றபோது,அன்றைய நிலையில், நிர்வாண சிற்பங்கள் ஓர் அறிவு போதிக்கும் விசயமாகவும்,அந்தரங்கங்களைக்கூட அசிங்கமில்லாமல் தருவதற்கோர் வடிகாலாகவும்,இருந்து வந்துள்ளது என்பதை யாரும் மறுக்க இயலாது.

அது மட்டுமின்றி அன்றைய காலகட்ட மக்களின் அறிவு வளர்ச்சியையும் அது எடுத்தியம்புகிறது.மக்களுக்கு ஓர் ஆக்கபூர்வமான ,அறிவியல் கண்ணோட்ட அணுகுமுறை இருந்ததையும் நாம் அறிய இயலுகிறது.இன்றைய நவீன காலக்கட்டங்களில் கூட அந்த அணுகுமுறை மழுங்கிவிட்டதோ என்ற எண்ணம் எழுகிறது.அதன் வெளிப்பாடுதான்,தற்போது  பல கோவில்களில்,நிர்வாண சிற்பங்களில் பாலின உறுப்புகள் உடைக்கப் பட்டுள்ளதில்  புலனாகிறது..ஆனால் அன்றைய மக்கள் ஓர் தெளிவான மனநிலைக்கும்,வாழ்க்கையின் சாராம்சங்களை அறிந்து கொள்ளும் ஆர்வத்துடனும் இருந்துள்ளது தெளிவு பெறுகிறது.

அப்போ கோயில்கள்,வெள்ளப்பெருக்கு,புயல் மற்றும் இயற்க்கை சீற்றங்கள் பாதிக்கும் நாட்களில் மக்கள் தங்குவதற்கு ஓர் பாதுகாப்பு அரணாகவும் இருந்து வந்துள்ளது .இதன்மூலமும்,அந்தக்கால மற்றும் அறிவியல் அணுகுமுறை மக்களை சென்று அடைந்துள்ளது.

இப்படி நிர்வாண சிற்பங்கள் எவ்வகையில் நோக்கினும் காண்போரை கவர்ந்திழுக்கிறதே தவிர,கருத்து செறிவை முன்னிருத்துகிறதே தவிர காம இச்சை தூண்டுவதாய் இல்லை.

நிர்வாணம் வளரும்..


Widget byLabStrike


4 comments:

  1. எடுத்துகாட்டு படங்களுடன் அருமையான தகவல்கள்...

    ReplyDelete
  2. மீடியாக்களின் உதவி இன்றி, உறவுகள், நண்பர்கள் என யாரின் தேவையும் இல்லாமல் கோவில் சிற்பங்களைக் கொண்டே ஒருவன் பாலியல் கல்வியை படித்துவிட இயலும். தொடருங்கள்.

    ReplyDelete
  3. ஆமாம் நண்பரே...பாலியல் கல்வியில், கோவில் சிற்ப்பங்களை விட முதிர்ச்சியானப் பாடம் எதிலும் இல்லை.

    ReplyDelete