Tuesday, June 29, 2010

ராவணன்-பாடல் வரியில் பட விமர்சனம்


தமிழ் சினிமாவுக்கு வந்த  நீயும் படம் பண்ண
பலப் படங்கள பண்ணி நீயும் முடிச்சுட்ட
அட கோலிவுட் பட்ஜெட்  சிறுசு தான்
அப்போவும் உன்னோட  பட்ஜெட் மட்டும் பெருசு தான்...

காப்பி பட  பட்ஜெட்  பெருசுதான்
இங்கே உணர்வு சொல்ற   பட்ஜெட் சிறுசுதான்...
பல பிரமாண்ட சினிமாக்கள்  வருகுதடி ..
அதில் பல உலக சினிமா காப்பியா இருக்குதடி.

உசுரே போகுதே..உசுரே
போகுதே...
இந்தப் படத்த நானும்
பாக்கயில...
ஓ...நானும் தவிக்குறேன்
கொடுத்தக் காசக் கேக்குறேன்
சாக அடிசுட்ட மணி(ரத்ன)க்குயிலே...

அசத்தலான நடிகர் விக்ரம்
இருந்தும்- நீ
பக் பக் னு கத்த வச்சுட்டியே
கலக்குற நடிகர் னு
தெரிஞ்சிருந்தும்
அவர கலங்க நீயும் அடிச்சுட்டியே

உன் கதையும் களமும் தூரம் தூரம்
ஒட்ட நினைக்கேன் ஆகல...
தோழி போகதேடா னு சொல்லியும்
மாய மனசு கேக்கல

தவியா தவிச்சு...
காட்சி தடம் கெட்டுத் படத்தில் திரியுதடி...
படத்துக்கு போகாதேன்னு சொன்ன தோழி...
என்ன தள்ளி நின்னு பார்த்து சிரிக்குராடி...

இந்த படத்தப்  பாத்து பிடிச்ச பைத்தியம்
தீருமாங்க..
அடி மந்திரிச்சு விட்ட என் மனசு
மாறுமாங்க..
வைரமுத்து  உங்க வைர வரிகள சுட்டுட்டேன்
மன்னிச்சிருங்க..

ஐஸ்வர்யாவும் விக்ரமும்
சுத்தி சுத்தி கேமரா  வருகுதே
கதையும் காட்சியும்
புரியாம இப்ப தலை சுத்தி கிடக்குதே.

உசுரே போகுதே...உசுரே
போகுதே...

இந்த உலகத்தில் இது
ஒண்ணும் புதுசில்ல
ஒண்ணு ரெண்டு தப்பி போகும்
புராணக் கதையை  சுட்டதுல
விதி சொல்லி வழி போட்டான்
மனுசப்புள்ள
உலக சினிமாவ  சுடும் போது விதியுமில்ல..

எட்ட இருக்கும் ஹாலிவுட்
தொட பாக்குது கோலிவுட்
தொட்டு விடுற தூரம்
இருந்தும்
கதை சுடுற புத்தியோ போகல...

ராவணன இகழ்றியா இல்ல ராமன புகழ்றியா
ஒரு பாகுபாடு தெரியலையே.
பாம்பா விழுதா
பிரிச்சிப் பாத்து
கண்டு பிடிக்க முடியலையே....

இந்தப் படத்து டையலாக் கேட்டு பல கட்டைகள்
இங்கே சாயலாம்
பேசும் படத்துல பீலா விடும் -சுகாசினி
உன் பப்பு  இங்கே வேகலமா
கலை இயக்கமும்,காமெராவும்
மட்டும் நெஞ்சுக்குள்ள,மனசுக்குள்ள...

விக்ரம் நல்லவரா கெட்டவரா
கதையில் ஒன்னும் புரியலே
வீராவையும்,பார்வையாளனையும்
சேர்த்தே சாகடிச்சு தொலையுறே
படம் புரியாம இப்ப தலை சுத்தி கிடக்குதே.

உசுரே போகுதே... உசுரே
போகுதே...



Widget byLabStrike


No comments:

Post a Comment