Saturday, June 26, 2010

கூத்தாடிகளின் காத்தாடிகள் கவனத்திற்கு...

சினிமா என்ன செய்தாலும்,கூத்தாடிகள் என்ன சொன்னாலும் எமக்கு வேத வாக்கு...எம் ஹீரோ,உமக்காய் பால் சொம்பு தூக்கவும்,பேனர் கட்டவும்,முதல் நாள்,முதல் காட்சி கைதட்டி,விசிலடித்து பார்க்கவும் காத்திருக்கிறோம் என்றிருக்கும் இனமானமுள்ள எம்மினமே!!!நம்மினம் இறந்தாலும் கவலைப் படாது கிரிகெட்டுக்கும்,சினிமாவுக்கும் உயிர் வாழும் உறவே!!!

கூத்தாடிகளின் காத்தாடிகளே வணக்கம்!...நேத்து அதான் முட்டிய போட்டு நட்டுகிட்டு நல்லா டான்ஸ் ஆடுவானே அந்தப் பையன்... அவன் பேரு என்னா...ஆஅம்..அதான் டாக்டர் விசய்..நம்மாளுங்க ஈழத்துல கேக்க ஆளில்லாம செத்துகிடந்தப்ப..நம்ம காச பிச்ச எடுத்து சம்பாதிச்சது பத்தாதுன்னு , திடுதிப்புன்னு கெளம்பி காங்கிரஸ் கிட்ட பதவி பிச்சை கேட்டு ஓடுனான்..அவன எவனும் கண்டுக்கல..அப்புறம் ஓடி வந்தான்..

அப்புறம் திரும்பி பாத்தா அடுத்த ஆளு அட நம்ம சூர்யா..இன்டோ-இலங்கை கூட்டு கம்பெனி கு கையெழுத்து போட்டுட்டு அப்புறம் நம்மாளுக கொஞ்சம் முழிச்சு கிட்டாங்க னு தெரிஞ்ச வுடனே..நான் அப்படிலாம் பண்ணலன்னு ஜகா வாங்கினார் .

அடுத்து பாத்தா ஐஃபா ஆட்டத்துக்கு வர சொல்லி சிங்களவன் ஆள் அனுப்பிருந்தான்..அத பிரகாஷ்ராஜ் போன்று சில நல்ல மனசுள்ள நடிகர்கள் நிராகரிச்சதால பல கூத்தாடிங்க, நாங்க வரலன்னு பில்ட் அப் கொடுத்துட்டாங்க..உணர்வுள்ளவன்க மாதிரி சீனும் போட்டுட்டாங்க.

அப்புறம் பாத்தா நம்ம சமத்துவ மக்கள் கச்சி தலீவரு பேட்டி கொடுத்துருக்காரு..சிங்கள அரசாங்கத்த ஆதரிச்சி..என்னங்கடா நடக்குது இங்கன்னு கேட்டு முடிகிறதுக்குள்ள...நம்ம சிங்கத்துக்கு என்ன முறுக்கி கிச்சோ தெரியல..சிங்கள மண்ணுல ஐஃபா ஆட்டம் ஆடிட்டு வந்த விவேக் ஒபராயோட தான் நடிச்ச படம் ரத்த சரித்திரம் வெளியாக இருக்க நேரத்துல சூர்யாவின் திமிரான ஒரு பேட்டியை தோழி ஒருவர் இணையதளத்தில் பகிர்ந்திருந்தார்...

ஜூன் 24ஆம் தேதி 'பெங்களூர் மிர்ரர்' நாளிதழுக்கு சூர்யா அளித்துள்ள பேட்டி:

"தடையை மீறி கொழும்பில் நடந்த ஐஃபா விழாவில் பங்கேற்ற விவேக் ஓபராயுடன் நீங்கள் நடித்துள்ள ரத்த சரித்திரா படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதே?"

"ஐஃபா விழா விவகாரமே செத்துப் போன ஒன்று. அதை இனியும் இங்கே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. அது ஒரு சின்ன விஷயம். அதைப் போய் இன்னும் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறீர்களே… என்னுடைய ரத்த சரித்திரா வெளியீட்டை அந்த விழா தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகள் ஒன்றும் செய்து விடாது. சமீபத்தில் ராவணன் ரிலீஸானபோதுகூட யாரும் ஒன்றும் சொல்லவில்லையே.

ரத்த சரித்திரம் படப்பிடிப்பின்போது நான் விவேக் ஓபராயோடு பேசினேன். அப்போது யுனிசெப் மற்றும் அந்நாட்டின் உள்ளூர் தமிழர்களுடன் இணைந்து புதிய பள்ளி ஒன்றை அமைத்திருப்பதாகச் சொன்னார். இந்த விஷயத்தில் அவர் என்ன உதவி கேட்டாலும் செய்ய நான் தயாராக உள்ளேன். அவருடன் சேர்ந்து அந்தப் பணியைச் செய்ய விரும்புகிறேன்.

நடிகர்கள் இலங்கை சென்றது வெறும் கேளிக்கைக்காக அல்ல. அங்குள்ள மக்களுக்கு உதவத்தான். இந்தப் பிரச்சனை அன்றோடு முடிந்துவிட்டது. திரும்பத் திரும்ப அதை கிளறுவது ஏன்?" என்று நடிகர் சூர்யா கூறியுள்ளதாக அறிந்தேன்.

இப்படித்தான் உணர்வில்லாம் நேரத்துக்கு ஏத்த மாதிரி கூத்தாடிங்க நிகழ்கால வாழ்க்கையிலும் நடிக்கிறாங்க...இதுப்பற்றி இதுவரை நான் உணர்வாளர் னு மதிக்கிற அண்ணன் சீமானும் சூர்யாவின் பேட்டி பத்தியோ,அந்தப் படம் வெளியாகிறது பத்தியோ ஒன்னும் கண்டுக்கலன்னு கேள்விப்பட்டேன்..ஹிர்த்திக் படத்துக்கு காட்டின எதிர்ப்பை அண்ணன் சீமான் கண்டிப்பா இந்த விசயத்துல காட்டி ஆகணும்..ஹிந்திக்காரன் தப்பு செஞ்சாலும் மன்னிச்சிக்கலாம்..ஆனா நம்ம தமிழனே அத பண்ணானா??

அண்ணன் சீமான் கண்டிப்பா நிகழ்கால வாழ்க்கையிலும் நடிக்கிற கூத்தாடிங்க கூட்டத்துல சேர மாட்டாருன்னு நம்புறேன்..பொறுத்து இருந்து தான் பாக்கணும்..

காத்தாடிகளே...கூத்தாடிங்க நம்ம முதுகுல ஏறியே சவாரி செஞ்சுகிட்டு நம்ம முதுகுலையே குத்துறாங்க...காத்தாடிங்க  கண்டுக்காம விட்டா தானா அடங்குவாங்க இந்த கூத்தாடிங்க..செய்வோமா..உசாரா இருங்க..பால் சொம்பு எடுத்துட்டு கிளம்பிடாதீங்க..

போங்கடா உங்களுக்கு வேற வேலையே இல்ல..இப்படித்தான் எதாவது எழுதுவீங்க..தலைவர கொற சொல்றீங்க..சிங்கத்துக்கு அப்புறம் அவர் என்ன (அ)சிங்கம் பண்ணுவார்னு பாத்துடிருக்கோம் பால் ஊத்த...கிறீங்களா!!.

வாழ்க சமுதாயம்...

Widget byLabStrike


12 comments:

 1. Well said Balaji !!

  They won't listen even if 1000 Periyars tell it to them :-(

  ReplyDelete
 2. சொம்பு தூக்கிங்களுக்கு இது புரியாது!

  இலங்கை தமிழர்களின் சாவுக்கு காரணமான ராகுலின் காலில் விழுந்தவர் விஜய் என்றாலும், தலைவன் என்கிறான்.

  இவர்களையெல்லாம் என்ன செய்ய@!

  -ஜெகதீஸ்வரன்
  http://sagotharan.wordpress.com/

  ReplyDelete
 3. ஆமாம் நண்பரே..இனமானம் இழந்து அல்லவா திரிகிறார்கள்..

  ReplyDelete
 4. சூர்யா மீது சீமானின் ரத்த சரித்திரம் படம் தொடர்பான நிலைப்பாடு எனக்குப் பிடிக்கவில்லை..மற்றபடி அவர் நல்ல உணர்வாளர்...உண்மையாக உழைப்பவர் என்றே எண்ணுகிறேன்.. ஈழத்து எழுத்தாளர் ஷோபா சக்தி, சீமானைப் பற்றி விமர்சிக்கும் அளவுக்கு தகுதியானவர் இல்லை..ஷோபா சக்தி எழுத்துக்காக எதையாவது எழுதுபவர்...மாவீரர்களின் தியாகத்தைக் கொச்சைப் படுத்துவதே இவருடைய பிரதான வேலையாகக் கொண்டிருப்பவர்..இவரது பின்னணி தெரியாமல் சிலர் அவரை உணர்வாளர் என்றெண்ணி ஏமாற்றம் அடைகிறார்கள்..raw வோட pay roll இல் இருக்கிறாரா என்ற சந்தேகம் நெடுநாளாக உணர்வாளர்கள் மத்தியில் இருக்கிறது..இவரின் இரட்டை வேடம் புலிகளையும் எதிர்ப்பார்,தமிழீழமும் வேண்டுமென்பார்..அவர் தமிழர்களின் எதிரி..அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்..

  ReplyDelete
 5. ஐபா விழா சென்று சிங்களவனுடன் உறவாடி வந்திருக்கும் விவேக் ஓபராய்,சூர்யாவுடன் இணைந்து நடித்த ரத்த சரித்திரா திரைப்படத்தை , தான் எதிர்த்தால் , சூர்யாவுடன் தனக்குள்ள தனிப்பட்ட நட்பு பாதிக்கும் என்று சீமான் எண்ணுகிறார் என்றே எண்ணுகிறேன்..கண்டிப்பாய் பொது வாழ்க்கைக்கு வரும் போது தனிநபர் உறவையோ நட்பையோ கொள்கைக்கு எதிராய் தூக்கிப் பிடிக்க கூடாது...

  ReplyDelete
 6. சீமானுக்கு ரொம்ப சொம்பு தூக்கரீங்க.. அவர் என்ன பன்றார்னு பார்ப்போம்.

  ReplyDelete
 7. நான் தூக்குற சொம்பு,கூத்தாடிங்களுக்கு தூக்குற பால் சொம்பு இல்ல நண்பரே...தண்ணீர் சொம்பு..வீட்டுக்கு வரும் விருந்தினருக்கு, தண்ணீர் கொடுத்து வரவேற்பது தமிழனின் பண்பாடு.

  ReplyDelete
 8. tamil tamil nu solli peru vanguravanga dan adigam irukanga,
  thanmanam lan chumma kathula paraka vitachu,
  pesi pesi time wastepanradhu dan ipodhaya trend.

  ReplyDelete
 9. pesuvadhu enbhadhum poraattathin velippaade..palar pesa pesa yaaro oruvanuk kaavadhu unarchi varum.avan seyal baduvaan.ulagam andru avanai inam kaanum.avan oru naal thalaivan aavaan..

  ReplyDelete