Friday, June 25, 2010

பறிபோகும் சுதந்திரம்


இப்போதுதான் பிறந்த

அந்த பிஞ்சு முகத்தில்

சுதந்திர சுவாசம்.

முடிகூட அடங்காமல்

முறைத்துக் கொண்டிருந்தது.

அழுதலில் கூட

ஆக்ரோசம் தெரிந்தது.

கண்கள் எதையோ

வெறித்து தேடுகிறது.

காதுகள் புறவொலிகளை

உன்னிப்பாய் உணருகிறது.

கை,கால்களை ஆட்டியபடி

கவலையற்றுக் இருக்கிறது குழந்தை.

அழுதலை அடக்கி

அடங்காமுடி சீவி

துள்ளிகிட்டே இருக்கான்

பாலூட்டி தூங்க வை

என முதல் சுதந்திரமே

சிறைப்படுத்தப் படுகிறது

தாயின் அன்பில்..

Widget byLabStrike


4 comments:

  1. //துள்ளிகிட்டே இருக்கான்
    பாலூட்டி தூங்க வை
    என முதல் சுதந்திரமே
    சிறைப்படுத்தப் படுகிறது...//
    nice

    ReplyDelete
  2. உங்கள் பின்னூடங்களில் , தொடர்ந்து சிறைப் படுத்துவதற்கு நன்றி நண்பரே..

    ReplyDelete