Tuesday, June 22, 2010

தற்கொலை செய்கிற தைரியமே!!!

நேற்று  காலை அரசு கவின் கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள மரத்தில் மாணவர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். 40 அடி உயரத்தில் அவரது பிணம் தொங்கிக் கொண்டிருந்தது.

அந்த மாணவரின் பெயர் சசிக்குமார் (வயது 26). இவரது சொந்த ஊர் மதுரை விளாங்குடி. சென்னை எம்.எம்.டி.ஏ. காலனியில் உள்ள நண்பர் ஒருவரின் அறையில் தங்கி இருந்து அரசு கவின் கலைக்கல்லூரியில் படித்து வந்தார்.

மாணவர் சசிக்குமார் தனது சட்டைப்பையில் 10 பக்க கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார் என செய்தித் தாள்களிலும்,இணைய செய்திகளிலும் காண நேர்ந்தது,பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது.கீழ்க்கண்ட கருத்துகளை அவர் எழுதியிருந்ததாகவும் கண்ணுற்றேன்..

உழைப்பதற்காக பிறந்த உயர் தமிழ் இனமே, அகதியாக அடைபட்டு கிடப்பதா? உலக மனித இனமே அவர்களை கட்டவிழ்த்து விடுங்கள். பாலைவனத்தை சோலைவனமாக மாற்றும் மந்திரவாதிகள் அவர்கள். ஆதவனிடம் நெடுநாள் பழகி பழகி கருத்துப்போன கருப்பு சுனாமிகள். முள்ளி வாய்க்காலை உலகம் மறந்தாலும் நாம் மறக்கக்கூடாது.எனக்காக கண்ணீர் சிந்தாதீர். இது மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து விழுந்த விதை என்பதை உணர்த்திடுங்கள். ஆசியாவிலேயே முதலில் தொடங்கப்பட்ட என் கல்லூரியின் இன்றைய நிலை? உலக தரத்துக்கு இதனை உயர்த்தி இருக்க வேண்டும். கடந்த 21 ஆண்டுகளாக ஓவிய ஆசிரியர்கள் அரசு பணிக்கு செல்ல முடியாத நிலையை மாற்றுங்கள். 8 மணி நேரத்துக்குள் தயவு செய்து என் உடல் உறுப்புகள் அனைத்தையும் முதலில் தானமாக கொடுத்து விடுங்கள். உறங்கும் நேரம் 5 மணி. -சசிக்குமார்

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது என கண்டேன்..கடிதத்தில் கூறப்பட்டகருத்துகளில் அவனது  பொதுநலம் புரிகிறது..இருந்து போராட வேண்டிய தைரியம் உள்ளவர்கள்,இப்படி இறந்து போனார்களே என்று மனது வலிக்கிறது..

கடந்த ஈழப் போரின் போது போராளி தியாக தீபம் முத்துக்குமார் அரசின் கவனத்தை ஈர்க்க தன்னுடலை தீபமாக்கி மறைந்து போனார்.அதற்கு பின் அவர் உடலை வைத்துகொண்டு அரசியல் ஆதாயம் தேட எத்தனையோ பேர் முன்வந்தார்கள்..அந்த தியாகியின் கனவை கை கழுவினார்கள்..அதற்குப் பின் ஈழம் மக்களின் நிலை கண்டு மனம்வெதும்பி ஏனையோர் இறந்தார்கள்.என்ன பலன்???

உணர்வின் தலையாய இளைய சமுதாயமே..நாளைய தலைவர்களே.. தற்கொலை செய்வதாலோ இறப்பதாலோ இந்த அரசோ,இருப்பவர்களோ ஒன்றும் செய்துவிடப் போவதில்லை இரண்டு நாள் பேசுவார்கள்,பின் அவரவர் வேலையை பார்ப்பார்கள்..தற்கொலை செய்கின்ற  அளவுக்கு தைரியமுள்ள தலைமுறையே, இறப்பதால் என்ன ஆகிவிடப் போகிறது இங்கே ..உங்களை போன்று உணர்வுள்ளோர் இருந்து போராட,போரிட வேண்டும்..தலைவனாக பிறந்தவர்கள் நீங்கள்..தற்கொலை வேண்டாம்..உங்கள் தைரியம் இந்த சமுதாயத்திற்கு வேண்டும்..ஈழம் கானுவதற்கு வேண்டும்..இருந்து போராடுங்கள்.வெல்வோம்!

Widget byLabStrike


2 comments:

 1. Very sad to hear !!! No one should commit suicide for any issues :-(
  May his soul rest in peace..

  ReplyDelete
 2. மீண்டும் ஒரு குமரா

  வெந்தும் நொந்தும்

  இங்கே நாங்கள்

  போரட வேண்டிய நீ எங்கே

  உன் மரணத்திற்கு பதில் சொல்ல

  இங்கு யாருமில்லை!...

  மீண்டும் பிறந்திடு

  போராட உண்மையான தமிழர்கள் தேவை!....

  - ஜெகதீஸ்வரன்
  http://sagotharan.wordpress.com

  ReplyDelete