Monday, June 21, 2010

நடு இரவில்..சூப்பர் டீலக்ஸ் பயணம்

நேற்று திருச்சியிலிருந்து சென்னைக்கு அரசு சூப்பர் டீலக்ஸ் பேருந்தில் இரவு பயணம் மேற்கொண்டேன்..என் பயண வழியின் பாதியில் பெயர் தெரியாத ஓர் இடத்தில் ஓர் சூப்பர் டீலக்ஸ் பேருந்து நின்று கொண்டிருந்தது..அதன் அருகாமையில் நிறைய மக்கள் நின்று கொண்டிருந்தனர்.அவர்கள் எங்கள் பேருந்தை நிறுத்தி ,அவர்கள் வந்த அந்த பேருந்து வழியில் வரும் போது என்ஜின் பிரச்சினையால் நின்றதாக சொல்லி நான் வந்தப் பேருந்தில் ,அனைவரும் ஏறி நின்று கொண்டே பயணம் செய்தபடி வந்தார்கள்.நிறையக் கூட்டம் வேறு.....அவர்கள் வந்தப் பேருந்தில் ஏறும் போது உட்க்கார்ந்து நிம்மதியாக பயணம் மேற்கொண்டிருப்பார்கள்..இடையில் ஏற்பட்ட என்ஜின் கோளாறால் பாவம் மக்கள் என்று சிலர் முனகினார்கள்..நானும் கூட..என்னப்பண்றது என்ஜின் கோளாறு எதிர்பாராமல் நடப்பது தானே என்று சமாதானம் கொண்டோம்.

எங்கள் பேருந்து விக்கிரவாண்டியை தாண்டி இருக்கும்..பேருந்து சத்தம் மாறி கத்த ஆரம்பித்தது..இறங்கி பார்த்த போது அவர்கள் வந்த பேருந்தில் ஏற்ப்பட்ட அதே கோளாறு..பேருந்தின் அடியிலுள்ள இரும்பு ராட் கழன்று தனியாக சாலையை உரசிய படி வருகிறது..அதில் வரும் நெருப்பு துளிகள் பற்ற ஆரம்பித்தால் விபத்து ஏற்ப்படும் அபாயம் உள்ளது ..நல்லவேளை இரு பேருந்துகளிலும் அது தவிர்க்கப்பட்டது பாராட்டுக்குரியது..அதற்குப் பின் எல்லோரும் இறங்கி வேறு பேருந்து பிடித்து சென்னை வந்தோம்.

ஆனால் முதல் பேருந்தில் ஏற்பட்ட அதே கோளாறு அடுத்த பேருந்திலும் ஏற்பட்டது எதிர்பாராதது என்று சொல்லமுடியாது..அது குறிப்பிட்ட அலுவலர்களின் கவனக்குறைவே..நடு இரவில் மக்கள் படும் அவஸ்தைகளை அறியாமல், இப்படி மெத்தனமாக நடந்து கொள்ளும் அலுவலர்களால் எவ்வளவு அவஸ்தை பாருங்கள்..

Widget byLabStrike


1 comment:

  1. இப்போது எப்படியோ...
    ஒரு காலத்தில்,
    தஞ்சையிலிருந்து செல்லும் பேருந்தில் ஏறினால்,
    அது கண்டிப்பாக புதுக்கோட்டை டிப்போ வருவதற்குள்
    நொண்ட ஆரம்பித்துவிடும்.
    (பயணிகளுக்கு ஒரு நாள் சங்கடம். பாவம், ஓட்டுனர்கள்.)

    ReplyDelete