என் பயணத்தினூடே
தன் பயணக் களிப்பில்
பறக்கின்ற பறவை
பின்னோக்கி ஓடி
வெற்றியை விட்டுக் கொடுக்கும்
பெருந்தன்மையுள்ள மரம்
ஜன்னலோரத்து காற்றில்
கூந்தல் உலர்த்தும் பட்சி
முன்சீட்டு முண்டாசு
முதியவர்
பின்சீட்டில் பெருமை
பேசும் பெரிசு
சண்டையிடும்
சகோதரிகள் கூட்டம்
கூச்சலிடும்
குழந்தை நட்சத்திரங்கள்
வாடாமல் அடிகின்ற
வாடைக்காற்று
என அத்தனையும்
என்னிலிருந்து
அந்நியப்பட்டுப் போகின்றன
தொலைதூரப் பேருந்தின்
தொல்லைத் தரும்
தொலைக்காட்சி..
fine
ReplyDeletethank you friend
ReplyDelete