Wednesday, June 16, 2010

பிரியத்(துக்கு)திற்குறிய பிரசவம்



நேற்று இரவு,அந்த அழைப்பு

எனக்குத்தான்

தன் மனமகிழ்வை

முதன்முதலாய் உதிர்த்து

என் உளமகிழ்வை

எதிர் நோக்குகிறது.

அவசரமான அழைப்பில்

ஆங்கிலத்தில் அவளின் உளறல்..

அறியாதவனாய் என்ன

என்கிறேன்..

அநேகமாய் இன்று

இரவுக்குள் எனக்கு பிரசவம்

ஆகிடும் என்கிறார்

மருத்துவர்

என்கிறாள் அவள்.

அப்போ இன்றிலிருந்து

இன்னோர் அன்பு

உன்னை ஆளப்போகிறதோ!

நன்று

வாழ்த்துக்கள்.

என்கிறது என் குரல்.

அவசரப்பட்டு அலைபேசியில்

அழைக்காதே என்னை..

நான் மயக்கமுற்று இருக்கலாம்.

நானே

அழைப்பேன் உன்னை..

அப்போ நற்செய்தி

அளிப்பேன்.

பிரசவ எதிர்ப்பார்பில்

தன் பிரசங்கத்தை

சொல்லி முடிக்கிறாள் அவள்.

இன்று..மதிய உணவு இடைவேளையில்
அவள் விட்ட தூதாய்
எனைக் குறுக்கிட்ட குறுஞ்செய்தி..
முறுக்கிட்டு சொல்கிறது..


"சிங்கக்குட்டி பிறந்திட்டான்

எம் சிந்தை மகிழ்ந்திடவே!!" என்று..

Widget byLabStrike


1 comment: