
நேற்று இரவு உணவருந்திகொண்டிருந்த போது அது நிகழ்ந்தது..நன்கு வறுக்கப்பட்ட மீன்கள் வாசமும் ருசியும் என்னை இழுக்கவே ருசியின் மயக்கத்தில் மீனின் முள்ளை அகற்றிடத் தெரியாமல் அப்படியே விழுங்கி விட்டேன்..அதனில் ஒரு முள் என் தொண்டைப்பகுதியில் சிக்கி விட்டது போலும்..என்னை ரொம்ப இம்சித்து விட்டது..அப்பப்போ குத்தியது..உள்ளிருந்து ஏதேதோ செய்து கொண்டிருந்தது..
ஒரு உண்டை வெள்ளை சோற்றை அப்படியே உருட்டி விழுங்கு..சரியாயிடும் என என் நண்பர் பாட்டிவைத்தியம் சொல்ல நானும் உருட்டி அடித்து பார்த்தேன்..ஹூம்.. ஹூம் ..என்னென்னவோ செய்து பார்த்தேன்..வேலைக்காகல... சரி காலைல பார்த்துப்போம் என அப்படியே நான் உறங்கப் போய் விட்டேன்..
உறக்கம் வர மறுத்தது..அது தொண்டையில் ஏதோ செய்வது போலிருந்தது..அப்புறம் ஒரு வழியாக உறக்கம் வந்து நானும் உறங்க ஓர் கனவு வந்து என்னை கலாய்த்து விட்டது..
கனவில் என் சிறு வயதில் என் ஊர் ஆற்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்த காட்சிகள் நிழலாடுகின்றன..மீன்கள் தூண்டிலில் சிக்கிக் கொண்டிருக்கின்றன.சிக்கிய மீனை லாவகமாக தூக்கி தூண்டில் முள்ளிலிருந்து பிரிக்கிறேன்..சிக்கிய மீன் என்னிடம் சொல்கிறது..
எப்படியோ தூண்டில் முள் போட்டு என்னப் புடிச்சிட்ட..என் முல்லைப் போட்டு உன்னப் புடிக்கிரண்டி னு...கனவு கலைகிறது..
நடு இரவில் கனவிலேயே எழுந்து வயிறு குலுங்க சிரித்து விட்டேன்..குலுங்கி சிரித்ததில் தொண்டையில் சிக்கிய முள் சிதறி விட்டது..
மீன் முள்ள வச்சு பழி வாங்கி புட்டுது அப்போ கோழி ?
ReplyDeleteஇதுக்கு பேர் தான் முள்ளை முள்ளால் எடுப்பதோ?
ReplyDeleteஐயோ..என்ன இப்போவே கிலிய கெலப்புரீங்கோ !!!
ReplyDeleteஅப்படித்தான் போலங்க. ..ஹ ஹா
ReplyDeleteVallvaniku Mullam Aayedham.....
ReplyDeleteகல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை..சரியா நண்பா..
ReplyDeleteஅந்த ரணகளத்துலேயும்
ReplyDeleteஒரு
dream scene....???
என்ன பண்றது நண்பா..வந்துடுச்சே...ha..ha
ReplyDelete