Thursday, June 10, 2010

நஞ்சு விதைக்கும் ஊடகங்கள்

சமீப காலமாக  அனைத்து ஊடகங்களும் சிறுவர்களை,பள்ளிப்பருவத்தினரை மையம்கொண்டு பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார்கள்..அப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியிலும், வியாபார ரீதியாகவும் பெரிய வெற்றிகளை ஈட்டி தருவதால் மழலைகளை   கொண்ட  நிகழ்ச்சிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன..அவை அறிவுப்போட்டி பாடல்,நடனம் என ஆரம்பித்து தற்போது தறிகெட்டு எங்கேயோபோய்க்கொண்டிருக்கிறது..







சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஆடல் திறமையை வெளிக்கொணரும் ஓர் ஆக்கபூர்வமான நிகழ்ச்சி எனும் பெயரில் அறிவிலித் தன்மையோடு நிகழ்ச்சியை வழங்குவதாக என் நண்பர் சொன்னார்..நானும் அந்த நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்த போது பதறி விட்டேன்..குழந்தைகளை வைத்து ஜோடி NO 1 ஜூனியர் எனும் பெயரில் மானங்கெட்ட நிகழ்ச்சியை கண்டேன்..அதில் வரும் தொகுப்பாளர்கள் குழந்தைகளிடம்  கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகுதா?உன் ஜோடி உனக்கு ஓகே வா??குழந்தைகள் உடைகளும் அரை குறையாகவும் அரங்கேறக் காணும் போதும்,அது அறியாமல் குழந்தைகளின் பெற்றோர்கள் மகிழ்வதை காணும் போதும் சமுதாயம் கண்கட்டப்பட்டு காயப்படுத்தப்படுவது நன்றாக தெரிகிறது..இது மட்டுமலாமல் சூப்பர் சிங்கரிலும் குழந்தைகள் தோல்வி மனோபாவத்தில் அழுவது பெற்றோர்கள் அழுவது போன்ற காட்சிகளைகாட்டி குழந்தைகளின் நேர்மறை சிந்தனையை மழுங்கடிக்கிறார்கள்..தோல்வி அடையும் குழந்தைகள் மீண்டும் எந்த போட்டியிலும் கலந்து கொள்ள இயலாத மனோபாவத்தை உண்டு செய்கிறார்கள்..
இது போன்று பிஞ்சு மனசில் நஞ்சுகளை விதைக்கும் நிகழ்சிகளை புறந்தள்ளுவது ஒவ்வொருப் பெற்றோரும் செய்ய வேண்டிய கடமையாகும்..நாம் அது போன்ற நிகழ்சிகளை ஊகுவிப்பதாலேயே நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் இது போன்ற நாதாரித்தன்மாக பேசியும் வழங்கியும் அடுத்த தலைமுறையை அலங்கலிக் கிறார்கள்...

Widget byLabStrike


4 comments:

  1. Naan Neenaipathai neeingal solluteeinga....

    ReplyDelete
  2. நன்றி நண்பரே..இளைய சமுதாயம் கண்ணுக்கு முன்னால் சீரழிக்கப் படும் போது அனைவருக்கும் கோபம் வரும் தானே..

    ReplyDelete