Tuesday, June 8, 2010

பெயர் தெரியாத தேவதைகள்



அள்ளி முடிந்த கூந்தல்
அவசரமான பார்வை
தூரத்துப் பேருந்தை
தொலைநோக்கும்
கண்கள்.
முடி மறைக்கும் முகம்
படரும் முடிக்குள்ளே
பதுங்கிப் பார்க்கும்
திருட்டு  தேடல்.
அடிக்கின்ற வெயிலில்
துடி துடித்து
துப்பட்டாப் போர்த்தும்
துருவ நட்சத்திரங்கள்.
நடந்து வரும்
சோலையென
சேலைக்கட்டிய
மலர்கள்.
ஜீன்ஸ்,டி ஷர்ட்டில்
சிட்டாய்ப் படப் படத்து
சட்டென பறந்திடும்
பறவைகள்..
அடித்துப் பார்த்து
அகம் புகுந்து
ஹார்ட் பீட்டை எகிரவிட்டு
சில மணித்துளியே
உபயம் தந்து
இரும்பு வண்டிக்குள்
இடம் பெயரும் பார்வைகள்.
இப்படியாய்..
ஒவ்வொரு நாளும்
பிரகாசித்து மறைகிறது
பெயர் தெரியாத
பல பட்சிகள்
பேருந்து நிறுத்தத்தில்...

Widget byLabStrike


2 comments:

  1. ohhhhhhhh ipo than theriyudhu office ku neenga ean late a poreenganu

    ReplyDelete
  2. kudumbatthula kulappattha undu pannaadheenga..en aatthukkaari appuram aathirappada poraa..hee hee

    ReplyDelete