Sunday, June 6, 2010

சிங்கம்..சீற்றம் குறையாது



டைட்டில் கார்டு போடும் போது ஆரம்பிச்ச கர்ஜனை படம் முடியும் வரை பின்னி பெடலேடுக்கிறது..ஓயாத உறுமல்..அப்பப்போ பசியாறி பொறுமைக் காக்கும் சிங்கம் போல தன் குடும்பத்தார் மற்றும் புலி அனுஷ்காவைப் பார்க்கும் போது மட்டும் (துரை) சிங்கம்.மற்றபடி அனைத்து காட்சிகளிலும் சிங்கத்தின் சீற்றம்...

சீறி சீறி தாக்குகிற வெறி..அடிக்கிற அடியில வேகம்..ஆக்ரோசம்..அப்பப்பா.. நமக்கும் அப்பபோ கொஞ்சம் சூடேருது ( அனுஷ்காவைப் பார்த்தும் தான்) யாரையாவது அடிக்கணும் போல..இப்படிதான் மொக்க கடி போட்டு காமெடிங்கிரப் பேர்ல அப்பப்போ டபுள் மீனிங் ல பேசி விவேக் சாவடிக்கிராறு..ஹி ஹீ..

வழக்கமான ஹரி படம்..போய் உட்க்காந்தது தெரியல..படம் முடிஞ்சு எண்டு டைட்டில் போடுறாங்க..செம பாஸ்ட்...அதுக்காக கதை என்னன்னு எல்லாம் கேக்ககூடாது...அப்புறம் எனக்கு கெட்ட சாரி நல்ல கோவம் வரும் சொல்லிபுட்டேன்..வில்லன் வந்தாரு சீன் போட்டாரு..கொள்ளையடிச்சாரு ..கடத்துனாரு..பில்ட் அப் கொடுத்தாரு...நம்ம சிங்கம் வந்தாரு சீன் போட்டவருக்கு ஆப்படிசாரு..சீறிப் பாஞ்சாறு..கடிச்சு குதறி..சாகடிச்சுடாறு நம்மள இல்லீங்க ..வில்லன..போதுமா நானே கதை சொல்லிட்டேன்...

ஆனா..ஒரு மேட்டர்.... கதை வழக்கமா இருக்கலாம்...... காட்சிகள் அருமை...எப்படி ஸ்க்ரீன் ப்ளே வெயிட் காட்டுறாரோ ஹரி..மக்கள் மனச புரிஞ்சு படம் எடுக்குறாரு....சலிப்பு தட்டாமல் போகிறது கதை,படம்..அடுத்து என்ன என்ன என்கிற எதிர்ப்பார்ப்பு எகிறுகிறது..கொடுத்தக் காசுக்கு சந்தோசமா படம் பாத்துட்டு வெளிய வரலாம் ..ஏலே மக்கா நல்ல படமுங்கோ...

Widget byLabStrike


3 comments:

  1. ஏலே producer கிட்ட கமிஷன் கிமிஷன் அடிசீரோ படத்த புகழ்ந்து தள்ளி புட்டீங்க. நானும் படம் பாத்துடன் கொஞ்சம் மொக்கை தான் இது - public voice

    ReplyDelete
  2. producer அட்ரஸ் வாங்கி கொடு..மீதி பணத்தை வசூல் பண்ணனும்.ஹி..ஹீ

    ReplyDelete