Saturday, June 5, 2010

அடிச்சோம்ல ஆப்பு..

பல்லாயிரம் தமிழனை பலிகொண்ட மண்ணில்  "ஐஃபா" திரைப்படவிழா...திருவிழாவாக்க முயற்ச்சித்தான் சிங்களவன்..அவன் கற்பனைக்கு ஆப்பு அடிக்கப்பட்டது..முதலில் பிரகாஷ்ராஜ்,தாமரை பின் ரஜினி,கமல்,சின்னத்திரை கலைஞர்கள்,தொடர்ந்து தென்னிந்திய சங்கங்கள்,தென்னிந்தியபிரபல நடிகர்கள்  இணைந்து  கலந்து கொள்ள மாட்டோம் என  ஆப்பு அடித்ததில் திருவிழா சிங்களவனின் தெருவிழா வானது..
மேலும் "ஐஃபா" விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்களின் படங்கள் தென்னிந்தியாவில் திரையிடப்படாது  என  தென்னிந்திய திரைப்படத்துறையினர்  சொல்லி இருந்தார்கள்....இது வெறும் வாய்சொல் ஆகிடுமோ என்றிருந்த வேளையில்...இல்லை உண்மையாக்கிவிட்டோம் என்பதாய் ஐஃபா" விழாவில் கலந்து கொண்ட ஹிர்த்திக் ரோசனின் கைட்ஸ் திரைப்படம் திரையரங்கிலிருந்து தூக்கப்பட்டிருப்பதுஆறுதல்..ஆப்புக்கு மேல் ஆப்பு..
இப்படி தமிழனின் உணர்வை மதித்து  சிங்களவனுக்கு ஆப்படித்த அனைத்து கலைஞர்களுக்கும், "ஐஃபா" வில் கலந்து கொண்ட நடிகர்களின் படங்களை திரையிடமாட்டோம் என்று உணர்வு காட்டிய அனைத்து திரையரங்கு  உரிமையாளர்களுக்கும்  தமிழர்களின் நன்றியை உரித்தாக்குகிறேன் ...

Widget byLabStrike


No comments:

Post a Comment