Wednesday, June 2, 2010

சுமையும்,வலியும் சுகமாகும்



அவளோடு நடந்த உரையாடல்களில்

அதிமுக்கியம் அது..

மச்சி...நேத்து பொய்வலி

வந்துடுச்சுடா என்கிறாள்..

பிள்ளைப்பேறுக்கு முன்னால்

ஏமாற்று வலி வரும்

என்பார்களே...அதுவா??

ஆமாம் மச்சி...

வலி உயிர் போச்சு..ஆனாலும்

அவளின் வார்த்தைகள் உற்சாக பேச்சு.

அழுதேனடா.. உன் அன்னையும்,என் அம்மாவும்

இப்படித்தானே நம்மைப் பெற்றிருப்பார்கள்.

ஆமாம்.

ஒவ்வொருத் தாயும் என்கிறேன்

நான்.

வலி பல சமயங்களில் நரகம்

ஆனால்..

இப்போ சுகம் என்கிறாள்.

ஆமாம் டி.

சுமையும்,வலியும்

சுகமாகும் தருணம்

தாய்மை கருத்தரிப்பு மட்டுமே..

தாய்மையின் சுகம் சுமந்து

வலியுடன் முடிகிறது உரையாடல்..

Widget byLabStrike


No comments:

Post a Comment