Friday, May 28, 2010

பருவ மாற்றம்



என் மழலைப்பருவ

உதைகளுக்காய் ஏங்கினாய்.

நான் உனை ஏறி மிதித்த போது

மனமகிழ்ந்து எனை தாங்கினாய்.

முட்டு,முட்டென்று

உன் முகம் காட்டி என்னிடம் முட்டுகள் பல வாங்கினாய்.

என் மழலை மொழி

வசவுகளை வாய் திறந்து வழி மொழிந்தாய்.

நான் கடித்து வைத்த

காயமெல்லாம் கல்வெட்டுகள் என்றாய்.

எம் பிஞ்சு கைகள் உமை அடிக்க

கன்னம் காட்டி ஏசு வானாய்.

உன் முடிப்பற்றி

இழுத்த போது இன்முகம் காட்டி சிரித்தாய்.

என் அடங்காமை செயல்கண்டு

என் புள்ளையாச்சே சும்மாவா?என்று

மீசை முறுக்கி மறுதலித்தாய்.

வளர்ந்த பொழுதில்..சொல்கிறாய் என்னிடம்..

செல்லம் கொடுத்து கெடுத்திட்டேன்டா..

உனை ஆரம்பத்திலேயே அடக்கி வச்சிருக்கணும்.

Widget byLabStrike


5 comments:

  1. rasanaikuria kavithai.

    ReplyDelete
  2. neraiya peru ippo thaan adha nenaikkraanga pa...................... but appavea yosikka veandiyadhudhaana?

    ReplyDelete
  3. ipo ne ena solla vara una thiruthanum nu sola variya ila kandukadhanu sola variya. nama policy kadamayai sei palanai eadhir parkadhey. (kuzhandhaiyidam verupai kaatadhey )

    ReplyDelete