Wednesday, May 26, 2010

அழுக்கடைந்த நிலவு



பௌர்ணமி மட்டுமே

பளபளக்கும் நிலவை

உனக்கினை சொல்லல்

அபத்தம்.

தேய்ப்பிறை காலம்

கருக்கின்ற அவளை

செவத்த சிறுக்கிக்கு-ஈடு சொல்லல்

கற்பனை வறட்சி.

வளர் பிறைக் காலம்

மட்டுமே முகம் கழுவும்

நிலவை

சுத்தக்காரி-உன்போல என்பது

அறியாமை.

மேகம் வந்தாலே

முகமாறும் நிலவை

என் மோகம் கூட

மயக்காத உன்னோடு ஒப்பிடல்

குறை.

எப்படி சொல்வேனடி

அழகான உன்னோடு

அழுக்கடைந்த நிலவை

உவமையாய்....

Widget byLabStrike


2 comments:

  1. seladhu seladhu podhum ayya nila nila nu mokka podadheengaya pudhusa eadhavadhu try panunga

    ReplyDelete
  2. நிலா தான் என்ன பொய் சொன்னாலும் ஒன்னும் கேக்காது..ha ha

    ReplyDelete