Thursday, May 20, 2010

எதிர்வினை



  • பொறுக்க முடியல...


கத்தரி வெய்யில்..காய்ச்சி எடுக்குது

காற்று இல்லை..தண்ணீர் இல்லை

மழை பெய்தால் கொஞ்சம்

பரவாஇல்லை.

  • மெலிதாய் இருண்டன வானம்


சூப்பர் கிளைமேட்

விடுமுறை விட்டு

வீட்டில் இருக்கணும்..

என்ஜாய் பண்ணனும்.

  • சிறிதாய் விழுந்தன தூரல்


மழை துளிகளை பார்த்தாலே

மனமுழுக்க மகிழ்ச்சி

மண்வாசனை வேறு

அனுபவிக்க வேண்டும்.

  • கொஞ்சம் பெரிதாய் பெய்தன துளிகள்


மனுஷன் ஆபீஸ் முடிந்து

வீட்டுக்குப் போகும்

இந்த நேரத்திலா வரவேண்டும்

சனியன் பிடித்த மழை.

  • பெய்யேன பெய்தது மழை


வீட்டை விடுத்து வெளியில்

போக முடியல

துவைத்த துணி காய மறுக்குது

பாலாப்போன மழை படுத்தி எடுக்குது

வெயிலடிச்சாலும் பொறுத்துக்கலாம்.

Widget byLabStrike


No comments:

Post a Comment