
அழுக்கு மூட்டை அலமாரிகள்
அகற்றபடாத குப்பைகள்
சின்னஞ்சிறு துண்டுகளாய்
சிகரட் கழிவுகள்
ஆக்சிஜன்னுக்கு பதிலாய்
ஆல்கஹால் சுவாசம்
காயும் ஜட்டியுடன்
காவல் நிற்கும் கதவு
பரிமாற்றத்திற்கு உள்ளாகும்
பருவக்கதைகள்
அரட்டை ஏராளம்
சண்டைகள் தாராளம்
அடுக்கப்பட்ட சீடி களில்
அதிகப் பட்சமாய் அடல்ட் ஒன்லி கள்
எண்ணை தேய்த்த தலைகளின்
வண்ணம் தோய்ந்த சுவர்கள்
தன் வாழ்நாளை இழந்து
வாழ்ந்து கொண்டிருக்கும் சுவற்று சுண்ணாம்பு
உறவு சேர்தலில்
உறவு பிரிதலில் உற்சாக பானம்
காலம் முழுக்க களிப்பு
கவலை இல்லாத வாழ்க்கை.
ஒவ்வொரு நாளும்
புதுவரவு..புதுஉறவு.
உலகம் சுருண்டு
ஓர் அறையில் கிடக்கிறது.
வாவ்.
ReplyDeleteதூள் கிளப்பிட்டீங்க.
நன்றி நண்பா..
ReplyDelete