Saturday, May 15, 2010

நான் எழுதிய தேர்வில்..வெற்றி பெற்ற என் தகப்பன்

நேற்று +2 தேர்வு முடிவுகள் வெளியானதையொட்டி மாணவர்களின் பரபரப்பும்,பெற்றோர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்புகளும் அடுத்து என்ன படிக்கலாம் என்ற ஏற்பாடுகளும் கண்கூடாடாகவும்,செவிவழிச் செய்தியாகவும் காணவும் கேட்கவும் நேரிட்டது.
இப்போது ரிசல்ட் வெளியான மறு நிமிடமே மாணாக்கர் மேசைகளுக்கு ரிசல்ட் செய்தி வந்து விழுகிறது..கணினி யுகமானதால்..

விடுப்பட்ட எண்கள் இல்லை..செய்திதாள்களின் முன்பதிவு இல்லை..முக்கியமாய் அவசர தற்கொலைகள் இல்லை..காலம் எவ்வளவு வேகமாய் அடுத்த பரிணாமத்திற்கு ஓடி இருக்கிறது..

பத்து,பதினைந்து ஆண்டுகளுக்கு  முன்னாலான அந்த வாழ்க்கையை கொஞ்சம் திரும்பி பார்க்கிறேன்.

நான் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி முடித்து தேர்வு முடிவுக்கான காத்திருப்புக் காலமது.கணக்கு என்றாலே எனக்கு பயம்.கணிதத்தில் மட்டும் பார்டர் மார்க் வாங்குவேன்..பல சமயங்களில் பெயில் மார்க் வாங்குவது உண்டு.அதனாலே ரிசல்ட் ஐ நினைத்து ஒருவித பயம் என்னை பற்றி இருந்தது.

இந்த இடத்தில் தான் என் தகப்பன் ஆம்.. என் ஆசானை நினைத்துப் பார்க்க வேண்டி உள்ளது.

தேர்வு முடிவு வெளி வரும் ஒரு வாரத்திற்கு முன்னரே என்னை, தேர்வு முடிவு குறித்து கவலை கொள்ளாதே..வெற்றி தோல்வி எதுவானாலும் எதிர் கொள்ள தெரிந்தவனே வெற்றி பெறுபவன்.எதுவாயிருந்தாலும் பரவாஇல்லை..இந்த வருடம் போனால் அடுத்த  வருடம்..முயற்சியை மட்டும் தளர விடாதே...என்று என்னை தயார் படுத்தி இருக்கிறார்.நன்கு படித்து பெரிய பதவியில் உள்ள பெற்றோர்களே தன் மக்களை படி,படி,மார்க் நிறைய எடுக்கணும் னு பயமுறுத்துகிற காலத்தில் என் பக்குவபட்ட அப்பாவை எண்ணிப் பார்க்கிறேன். இன்று எத்தனை பேர் இப்படி இருக்கிறார்கள்.

தேர்வு முடிவு அன்று, என்னை எங்கும் வெள்ளியே போகாதே..நான் பேப்பர் பார்த்து விட்டு வருகிறேன் என்று கடைக்கு போனார்.அப்போ அவர் ஓர் பாத்திரக்கடையில் தொழிலாளி.எனக்கு ஒரு தமையன் உண்டு.. எங்கள வாழ்வை ஒளிமயமாக்க தன கனவுகளை தொலைத்தவர்..எங்கள வளர்ச்சியே தன் கனவாய் சுமந்தவர்..எங்கள சுகங்களுக்காய் அவர் சுமந்த சிலுவைகள் ஏராளம்.

அவர் பேப்பர் வாங்கி வந்து என் ரிசல்ட் ஐ  பார்க்க முயற்சித்த போது என் தேர்வு எண்ணை அப்பாவின் நண்பர் வாங்கி பார்த்திருக்கிறார்.அப்போது சீரியல் மாறி பார்த்த அவர் என் நம்பர் இல்லாததாய் என் தகப்பனிடம் சொல்ல...தானே தேர்வு எழுதி தொல்வியுற்றதப்போல தடுமாறியிருக்கிறார்..வியர்த்துப் போயிருக்கிறார்.

நிலைமையறிந்த இன்னொரு நண்பர் குறுக்கிட்டு என் அப்பாவை தேற்ற முயற்சித்து பேப்பரை கொடுங்க நான் பார்க்கிறேன் என்று வாங்கி பார்த்தவர்,என் நம்பர் இருப்பதை கண்டு ஆனந்தப்பட்டு என் அப்பாவிடம் சொல்லியிருக்கிறார்..அதை என் தகப்பன் நம்பவே இல்லையாம்..தன்னை தேற்ற முயற்ச்சிக் கிறார்களோ என்று..

பின் சுதாரித்து உண்மை அறிந்த போது அந்த மனிதர் கொண்ட சந்தோசத்திற்கு  அளவே இல்லை...அவ்வளவு ஆனந்தம் அலாதி...தன் வாழ்வில் தானே  தேர்வு எழுதி   வென்றதாய் உணர்திருக்கிறார்..

இப்படி ஒரு தகப்பனை பெற்றதில் அகமகிழ்கிறேன்..இத்தருணத்தில் அந்த மகானுக்கு இந்த மகன் நன்றி சொல்லக் கடமைப் படுகிறேன்.


Widget byLabStrike


4 comments:

 1. நிஜமாவே அன்புடைய ஒரு அப்பா உங்களுக்கு கிடைத்து உள்ளார். கமெண்ட் எழுத பெயர்,ஈமெயில் என்று ஏன் இவ்வளவு ஃபார்மாலிட்டிஸ்...பின்னூட்டம் எழுதாமலே போவார்கள். மாற்றி விடுங்களேன்...

  ReplyDelete
 2. நன்றி தோழி...அது வோர்ட் பிரஸ் செட்டிங்க்ஸ் தோழி..மாற்றிப்பார்க்க முயற்சி செய்கிறேன்..

  ReplyDelete
 3. that is father. it recalls me about my father & i hope i will be a good father to my son. nice experience to me after reading this

  ReplyDelete
 4. நன்றி நண்பரே....மிக்க நன்றி

  ReplyDelete